நரேந்திர கிரி மரண வழக்கு குற்றப் பத்திரிகை தாக்கல்| Dinamalar

இந்தியா

நரேந்திர கிரி மரண வழக்கு குற்றப் பத்திரிகை தாக்கல்

Added : நவ 20, 2021
Share
புதுடில்லி :நரேந்திர கிரி மரணம் தொடர்பான வழக்கில், அவரது சீடர் உட்பட மூன்று பேருக்கு எதிராக, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தில் செப்., 20ல், மடத்தின் தலைவரும், 'அகில பாரதிய அகார பரிஷத்' என்ற சாதுக்களுக்கான அமைப்பின் தலைவருமான நரேந்திர கிரி, துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில்
நரேந்திர கிரி மரண வழக்கு குற்றப் பத்திரிகை தாக்கல்

புதுடில்லி :நரேந்திர கிரி மரணம் தொடர்பான வழக்கில், அவரது சீடர் உட்பட மூன்று பேருக்கு எதிராக, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தில் செப்., 20ல், மடத்தின் தலைவரும், 'அகில பாரதிய அகார பரிஷத்' என்ற சாதுக்களுக்கான அமைப்பின் தலைவருமான நரேந்திர கிரி, துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அவரது சீடர் ஆனந்த் கிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் இந்த வழக்கில், அலகாபாத் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.அதில் ஆனந்த் கிரி, அலகாபாத் ஆஞ்சநேயர் கோவில் பூசாரி ஆத்யா திவாரி மற்றும் அவரது மகன் சந்தீப் திவாரி ஆகிய மூன்று பேரும், சதி செய்து நரேந்திர கிரியை தற்கொலைக்கு துாண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X