பொது செய்தி

தமிழ்நாடு

இறந்ததாக கருதிய ஒடிசா நபர் மீட்பு குடும்பத்தினருடன் இணைத்த உதவும் கரங்கள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
காரியாபட்டி" காரியாபட்டி தனியார் கல்லுாtரி அருகே நான்கு வழிச்சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக காரியாபட்டி உதவும் கரங்கள் புனர்வாழ்வு இல்லத்திற்கு தகவல் கிடைத்தது. சமூக சேவகர்கள் மகேந்திரன், பிரித்திவிராஜ் அந்த நபருடன் லாவகமாக பேசி ஆசுவாச படுத்தி புனர்வாழ்வு இல்லத்திற்கு அழைத்து வந்தனர். மனநல மருத்துவர் பத்மினியிடம் சில

காரியாபட்டி" காரியாபட்டி தனியார் கல்லுாtரி அருகே நான்கு வழிச்சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக காரியாபட்டி உதவும் கரங்கள் புனர்வாழ்வு இல்லத்திற்கு தகவல் கிடைத்தது. சமூக சேவகர்கள் மகேந்திரன், பிரித்திவிராஜ் அந்த நபருடன் லாவகமாக பேசி ஆசுவாச படுத்தி புனர்வாழ்வு இல்லத்திற்கு அழைத்து வந்தனர். மனநல மருத்துவர் பத்மினியிடம் சில நாட்கள் சிகிச்சை அளிக்க அவரிடம் பேசியதில் தனது பெயர் சங்க முண்டா 31, தாய் ரம்யா, தந்தை ராதுராம், ஒடிசா மாநிலம் டார்ஜிங் என்பது தெரிந்தது. அதன் அடிப்படையில் அவர் ஊரில் உள்ள போதகர் ஒருவரை தொடர்பு கொள்ள, உறவினர் சுரேந்திர முண்டா அலைபேசி எண் கிடைத்தது . அவர் மூலம் சங்க முண்டாவின் சகோதரர் பூதுராமை தொடர்பு கொண்டனர். அதன்படி அவர் காரியாபட்டி புனர்வாழ்வு இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டார். இறந்து போனதாக கருதிய சகோரர் சங்க முண்டாவை பார்த்ததும் கட்டி தழுவி கதறி அழுதது அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.பூதுராம் கூறியதாவது: குடும்ப பிரச்னை காரணமாக சங்கம் முண்டாவுக்கு 2015ல் மனநலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஆர். ஜி., மருத்துவமனையில் சிகிச்சை பெற மெல்ல தேறினார். அதன் பின் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார். மீண்டும் மனநலம் பாதிக்க 2019ல் காணாமல் போனார். சகோதரர் இறந்து போனார் என நினைத்திருந்த போது, உதவும் கரங்கள் புனர்வாழ்வு இல்லத்தின் உதவியால் தம்பி சங்க முண்டா உயிருடன் உள்ளார் என்பதை கேள்விப்பட்டதும் ,அவரது மனைவி ,குழந்தைகள் குடும்பத்தினர் சந்தோஷப்பட்டோம்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X