சிவகாசி---சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் மேலாண்மை துறையின் நுகர்வோர் சங்கம் , கல்லுாரியின் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கார்னிவெல் டி டெலிகேசி உணவு திருவிழா நடந்தது. கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். பேராசிரியர் இந்துஜா வரவேற்றார். கல்லூரி முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிசாமி, மேலாண்மை துறை தலைவர் காசிராஜன் பேசினர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் நெருப்பில்லா சமையல் போட்டியில் மாணவிகள் காருண்யா தேவி, அனுசுயா, ஓவிய போட்டியில் மாணவி சவுமியா, சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் மொஹமத் ரிஸ்வானா வெற்றி பெற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலாண்மைத் துறை நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர்கள் கோட்டத்தாய் , ராகவி செய்திருந்தனர்.