பொது செய்தி

தமிழ்நாடு

சிட்டிசன் படம் போல் மாயமான கிராமங்கள் காரியாபட்டி அருகே குலசுவாமி மூலம் தகவல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
காரியாபட்டி; காரியாபட்டி எஸ்.தோப்பூர் எல்லையில் சுங்கம்பட்டி, மீனம்பட்டி கிராமங்கள் இருந்துள்ளன. விவசாயம், வணிகம் உள்ளிட்டவற்றால் செல்வ செழிப்பாக வாழ்ந்துள்ளனர். இதை அறிந்த குள்ள அரக்கர்கள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி, பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்து சுவாமி சிலைகளை தலைகீழாக பூமியில் நட்டு அட்டூழியம் செய்துள்ளனர். உயிர் பிழைத்தால் போதும் என

காரியாபட்டி; காரியாபட்டி எஸ்.தோப்பூர் எல்லையில் சுங்கம்பட்டி, மீனம்பட்டி கிராமங்கள் இருந்துள்ளன. விவசாயம், வணிகம் உள்ளிட்டவற்றால் செல்வ செழிப்பாக வாழ்ந்துள்ளனர். இதை அறிந்த குள்ள அரக்கர்கள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி, பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்து சுவாமி சிலைகளை தலைகீழாக பூமியில் நட்டு அட்டூழியம் செய்துள்ளனர். உயிர் பிழைத்தால் போதும் என சிலர் தப்பித்து பல்வேறு நகரங்களில் குடியேறினர். வயதானவர்கள் தப்பிச்செல்ல முடியாமல் ஊர் தெய்வமான லட்சுமி நரசிம்ம பெருமாளை நினைத்து வேண்டினர். இதையடுத்து காற்றும் மழையும் வந்தது. பெரும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட ஊர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. அதில் முசுறு (இறக்கை எறும்புகள்) படையெடுத்து குள்ள அரக்கர்களை கடித்து விரட்டியது. கிராமமும் வெறிச்சோடியது. அரக்கர்களுக்கு பயந்து வெளியேறியவர்கள் மீண்டும் இங்கு குடியேறாமல், ஆங்காங்கே நிரந்தரமாக தங்கினர். மெல்ல மெல்ல அங்கிருந்த வீடுகளும் அழியத் தொடங்கின. விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசாகின. காலப்போக்கில் ஊர் இருந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் போனது. இந்நிலையில் ஏழு தலைமுறைக்கு பின் அக்கிராமத்தின் வாரிசுதாரர்களின் சிலரது கனவில் லட்சுமி நரசிம்ம பெருமாள் காட்சி அளித்து வழிபட உத்தரவிட்டார். நீண்ட தேடலுக்கு பின் காரியாபட்டி அருகே மண்ணில் புதைந்த சிலை கண்டெடுக்கப்பட்டு தற்போது சிறிய அளவிலான கோயில் கட்டப்பட்டு அக்கிராமத்து வாரிசுதாரர்கள் சிலர் வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வெள்ளிகிழமை அன்று அங்குள்ள நாகம்மாளுக்கு படைக்கப்படும் பால் முட்டையை கருநாகம் சாப்பிட்டு செல்வதை நேரில் காணமுடிகிறது. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்று எச்சங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிட்டிசன் சினிமாவில் அத்திபட்டி காணாமல் போனது போல், குள்ள மனிதர்களால் காரியாபட்டி பகுதியில் இருந்த இரு கிராமங்கள் காணாமல் போனதை கண்டறிய வேண்டும்.போஸ், கோயில் பூஜாரி: எங்கள் முன்னோர்கள் இக்கிராமத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது தெரியாது. மூன்று ஆண்டுகளுக்கு முன் சுவாமி கனவில் தோன்றிய பின் தான் இதை தேட ஆரம்பித்தோம். அதற்கான வரலாறு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்துள்ளது. எஸ்.தோப்பூரில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளில் சுங்கம்பட்டி காரருக்கு என இன்றும் மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஊருக்குச் சொந்தமான இடங்கள் என்ன ஆனது என தெரியவில்லை. தற்போது கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக இந்த இடத்தின் உரிமையாளரிடம் கேட்டு கோயில் கட்டி சுவாமி கும்பிட்டு வருகிறோம். இதற்கு பாதை கிடையாது. கோயிலுக்கு பாதை கேட்டு மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறோம். கிடைத்தபாடில்லை. இங்குள்ள நிலங்களைப் பற்றியோ , பொருள்களை பற்றியோ எங்களுக்கு கவலை இல்லை. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பாதையின்றி சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் பாதை வழங்கினால் போதுமானது. கஷ்டம் என வந்தவர்களுக்கு துயர் நீக்கி தருவதில் லட்சுமி நரசிம்ம பெருமாள், கருப்பசாமி, நாகம்மாள், ஸ்ரீதேவி, பூதேவி உறுதுணையாக இருக்கின்றனர். தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினால் பல்வேறு உண்மைகள் தெரியவரும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X