பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்

Added : நவ 20, 2021
Share
Advertisement
மிளகாய், வெங்காயத்துக்கு காப்பீடுராஜபாளையம்: வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கலைவாணி செய்தி குறிப்பு: நடப்பாண்டு ராபி பருவத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மிளகாய், வெங்காய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேல ராஜகுல ராமன் வருவாய் கிராம மிளகாய் சாகுபடி விவசாயிகள் ரூ.964 வீதம் டிச.31, வெங்காயத்திற்கு ரூ.1631 வீதம் ஜன.31க்குள், அருகில்

மிளகாய், வெங்காயத்துக்கு காப்பீடுராஜபாளையம்: வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கலைவாணி செய்தி குறிப்பு: நடப்பாண்டு ராபி பருவத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மிளகாய், வெங்காய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேல ராஜகுல ராமன் வருவாய் கிராம மிளகாய் சாகுபடி விவசாயிகள் ரூ.964 வீதம் டிச.31, வெங்காயத்திற்கு ரூ.1631 வீதம் ஜன.31க்குள், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, இ-சேவை மையத்தில் பட்டா அடங்கல், வங்கி புத்தகம், ஆதார் நகல் கொண்டு காப்பீடு செய்துகொள்ளலாம், என கேட்டுள்ளார்.ஆடவர் மன்றம் தொடக்கம்சிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் ஆடவர் மன்றம் தொடக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) விஜயபாஸ்கர் நாயுடு தலைமை வகித்தார். ஆடவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சேவற்கொடியோன் வரவேற்றார். சேத்துார் அன்னை மருத்துவமனை டாக்டர் அர்ச்சுனன் பேசினார். ஆடவர் மன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.----எம்.எல்.ஏ., நிதியில் சுகாதார வளாகம்ராஜபாளையம்: சேத்துார் சேவுக பாண்டிய அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம், பேவர் பிளாக் தளம் திறந்து வைத்தார். பள்ளியில் நடந்த பொது மருத்துவ முகாமை பார்வையிட்டு கருத்துக்களை கேட்டறிந்தார்.மாவட்ட கல்வி அதிகாரி முத்தையா, தலைமை ஆசிரியர் சிவக்குமாரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் கலந்து கொண்டனர்.கட்டட பூமி பூஜைகாரியாபட்டி: எம்.இலுப்பைகுளத்தில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம், ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்ட பூமி பூஜை நடந்தது. பி.டி.ஓ.,க்கள் ராஜசேகர், சிவக்குமார், ஊராட்சி தலைவர் ஆதிஸ்வரன், மண்டல அலுவலர் வெங்கடேஷ்குமார் கலந்து கொண்டனர்.சூர்யா, ஜோதிகா மீது எஸ்.பி.,யிடம் புகார்விருதுநகர்: விருதுநகர் எஸ்.பி., மனோகரிடம் பா.ம.க., மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, நகர தலைவர் பாண்டி அளித்த மனு: ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைத்துள்ளனர். நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது குற்ற வழக்கும் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும், என கேட்டுள்ளார்.கவுரவிப்புவிருதுநகர்: விருதுநகரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ள, விருதுநகர் குல்லுார்சந்தையை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் செல்வி, சிவகாசி ஆனையூர் தனியார் கல்லுாரி பேராசிரியர் மதன், அதே ஊரை சேர்ந்த லேப் டெக்னிஷியன் ஐயப்பன், திருத்தங்கலை சேர்ந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர், ஹேண்ட் இன் ஹேண்ட் தன்னார் தொண்டு நிறுவனம் முதன்மை செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் கவுரவிக்கப்பட்டனர்.பிளவக்கல் அணை பூங்கா திறப்பு வத்திராயிருப்பு: கொரோனோ பரவல் காரணமாக அடைக்கப்பட்ட பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா 20 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும், தங்களின் சுய பாதுகாப்புடனும், தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பொதுமக்கள் வந்து செல்ல அனுமதிக்கப்படுவதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.மது விலக்கு பிரசாரம்சாத்துார்: மதுவிலக்கு எஸ்.பி., மகேஸ்வரன் உத்திரவின்படி சாத்துார் பஸ்ஸ்டாண்டில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், மது பழக்கத்தை கைவிட வலியுறுத்தி பிரசாரம் நடந்தது. டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய், எஸ்.ஐ., ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X