அரசியல் பகையால் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை

Added : நவ 20, 2021
Share
Advertisement
பாலக்காடு:'அரசியல் பகையால் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ளார்,' என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் பாலக்காடு அருகே ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித்; மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.முதல் கட்ட விசாரணை அறிக்கையில் இந்த
 அரசியல் பகையால் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை

பாலக்காடு:'அரசியல் பகையால் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ளார்,' என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித்; மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணை அறிக்கையில் இந்த கொலை சம்பவம், அரசியல் பகையால் தான் நடந்துள்ளது என கூறியுள்ளனர். மேலும் கொலையாளிகள் வந்த வெள்ளை நிற 'மாருதி 800' என சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.இந்த கார் குறித்து விபரம் தெரிந்தால் அலைபேசி போன் எண்; 94979 90095, 94979 87146 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு, போலீசார் அறிவுறுத்திஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X