குழந்தைகள் பாதுகாப்பு குழு; வார்டுதோறும் அமைக்க உத்தரவு

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் துரைராஜ், மல்லிகை, ராமராஜ், சரண்யா, முரளிகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் நிர்வாகிகள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் வினீத் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் துரைராஜ், மல்லிகை, ராமராஜ், சரண்யா, முரளிகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் நிர்வாகிகள் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.
வடமாநில தொழிலாளர் குடும்பமாக வசிப்பதால், அவர்களுடைய குழந்தைகள் பாதுகாப்பு மிக முக்கியம்.மாவட்ட அளவில், 11 நபர்களை கொண்டு இயங்கும், குழந்தைகள் பாதுகாப்பு அலகால் மட்டும், திறம்பட செயல்பட இயலாது. எனவே, கூடுதல் கமிட்டிகளை உருவாக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மாநகராட்சி அளவிலான கமிட்டி, மண்டலம் வாரியான கமிட்டிகள்; நகராட்சி அளவிலான கமிட்டி; பேரூராட்சிகள் கமிட்டி; ஒன்றிய அளவிலான கமிட்டி, ஊராட்சி அளவிலான கமிட்டி என, தலா, 14 பேர் அடங்கிய, 14 கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தலைவராகவும், கிராம நிர்வாக அலுவலர், செயலாளராகவும் இருந்து கமிட்டியை இயக்க வேண்டும்.கமிட்டியில் இடம்பெறும் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு, வட்டார அளவிலும், தாலுகா அளவிலும், சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.குழந்தைகள் பாதுகாப்பு நலன்கருதி, சென்னை மாநகராட்சியில், வார்டு வாரியான கமிட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர் நிறைந்த திருப்பூர் மாநகராட்சியிலும், வார்டு வாரியான கமிட்டி அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவதால், வார்டு அளவிலான கமிட்டி அமைப்பதன் மூலம், முழுமையான பாதுகாப்பு அளிக்க இயலும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா, குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் செல்வம் உட்பட, போலீஸ் அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X