செய்தி செய்தி

தமிழ்நாடு

உச்சத்தில் தக்காளி விலை இல்லத்தரசிகள் கவலை

Added : நவ 20, 2021
Share
Advertisement
பொங்கலுார்: ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி புரட்டாசி மாதத்தில் அறுவடைக்குவந்தபோது, விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு டிப்பர் (14 கிலோ), 80 ரூபாய்க்கு விற்றது.ஐப்பசியில் மழை பெய்ய துவங்கிய போது ஒரு டிப்பர், 120 ரூபாயாகவும், பின், 500 ஆகவும், ஐப்பசி மாத இறுதியில், 700 ரூபாயாகவும் உயர்ந்தது. தற்போதைய மழையால் தக்காளி மொத்தமாக அழுகி வருகிறது.விவசாயிகளுக்கு பத்தில் ஒரு

பொங்கலுார்: ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி புரட்டாசி மாதத்தில் அறுவடைக்குவந்தபோது, விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு டிப்பர் (14 கிலோ), 80 ரூபாய்க்கு விற்றது.ஐப்பசியில் மழை பெய்ய துவங்கிய போது ஒரு டிப்பர், 120 ரூபாயாகவும், பின், 500 ஆகவும், ஐப்பசி மாத இறுதியில், 700 ரூபாயாகவும் உயர்ந்தது. தற்போதைய மழையால் தக்காளி மொத்தமாக அழுகி வருகிறது.விவசாயிகளுக்கு பத்தில் ஒரு பங்குகூட மகசூல் கிடைக்கவில்லை. இதனால், தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.வெளி மாநிலங்களிலும் மழை பெய்வதால் அங்கிருந்து வரும் தக்காளியும் குறைந்துள்ளது.விளைச்சல் பாதிப்பால் ஆப்பிள் தக்காளி, 1,200ரூபாய்க்கும், நாட்டுத்தக்காளி, 900 ரூபாய்க்கும் விலை போகிறது. சில்லரை விலையில் ஒரு கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.தக்காளி அழுகியது போக மீதமிருக்கும் செடிகளில் பூக்கள் அதிக மழையால் உதிர்ந்து வருகின்றன. இதனால், உடனடியாக தக்காளி சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. வெளியூர் வரத்து அதிகரித்தால் நிலைமை சீரடையும். மழை குறைந்தால் சில வாரங்களில் வரத்து அதிகரிக்க கூடும்.தற்போது கார்த்திகைப் பட்டம் துவங்கியுள்ளது. தக்காளி நடவு செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது அறுவடைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகும். அப்போது விலை சரிய வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X