மனசாட்சிக்கு தெரியும்...

Added : நவ 20, 2021
Advertisement
ஒரு துப்புரவுப்பணியாளர் கவலையுடன் இப்படி சொன்னார்: ''மக்கும் குப்பை, மக்காத குப்பை தனியா பிரிச்சுத்தர சொல்றோம். ஒரு சிலர் தான் கேக்கறாங்க... பெரும்பாலான வீடுகள்ல, இதைக் கேக்கறது இல்ல.குப்பைகள்ல, பாலிதீன் குப்பை எக்கச்சக்கமாக இருக்கு... குறிப்பாக, இவையெல்லாம், ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன்கள்''துப்புரவுப்பணியாளரின் கவலை நியாயமானதுதான். திருப்பூரின் நடைபாதைக்

ஒரு துப்புரவுப்பணியாளர் கவலையுடன் இப்படி சொன்னார்: ''மக்கும் குப்பை, மக்காத குப்பை தனியா பிரிச்சுத்தர சொல்றோம். ஒரு சிலர் தான் கேக்கறாங்க... பெரும்பாலான வீடுகள்ல, இதைக் கேக்கறது இல்ல.குப்பைகள்ல, பாலிதீன் குப்பை எக்கச்சக்கமாக இருக்கு... குறிப்பாக, இவையெல்லாம், ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன்கள்''துப்புரவுப்பணியாளரின் கவலை நியாயமானதுதான். திருப்பூரின் நடைபாதைக் கடைகளில் இருந்து துவங்கி,பெரும்பாலான கடைகளில், பாலிதீன் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. ஆனால், இதுகுறித்து நடவடிக்கை என்பது சும்மா பெயரளவுக்குத்தான் தொடர்கிறது.துப்புரவுப்பணியாளர் மேலும் சொல்கிறார்:''பல வீடுகளில்,வீடுகளையொட்டி இருக்கிற காலியிடங்கள்ல அப்படியே குப்பைய வீசறாங்க... அவை பெரும்பாலும் பாலிதீன் குப்பைகள்தான்.ஏதோ தங்கள் வீட்டை விட்டு குப்பைகள் அகன்றால் போதும் என்ற முனைப்புதான் பலரிடமும். அருகில் குப்பையை வீசுவதால், குப்பை அகற்றப்பட்டு விட்டதாக ஓர் எண்ணம். இதனால் என்ன பயன்?''அவரது மனம் குமுறுகிறது. சமீபத்தில் பெய்த மழையில், திருப்பூரில் வடிகால் அடைக்கப்பட்டதுதான் வெள்ள பாதிப்புகளை அதிகப்படுத்தியது.குப்பைத்தொட்டியா, கால்வாயா?திருப்பூரின் பெரும்பாலான சாக்கடைக் கால்வாய்களில், டயர், பிளாஸ்டிக், தெர்மோகோல் போன்றவை குவிந்து கிடக்கின்றன. பலர், சாக்கடைக் கால்வாய்களையே குப்பைத்தொட்டியாக பயன்படுத்துவது கண்கூடாகத் தெரிகிறது.சாக்கடைக் கால்வாயில், வீட்டுக்கழிவுநீர் வெளியேறினால் பரவாயில்லை. ஆனால் திடக்கழிவுகளை அதில் கொட்டினால், கால்வாய் தாங்குமா!மழை பெய்யும்போது, பலர் சத்தம் இல்லாமல் , திடக்கழிவுகளைச் சாக்கடைக் கால்வாயில் வீசி விடுகின்றனர். தண்ணீரோடு, தண்ணீராக அடித்துக்கொண்டு சென்றுவிடும் என்பது அவர்களது நம்பிக்கை. ஆனால், சாக்கடை அடைப்பு பிரச்னை மேலும் பெரிதாகி, கழிவுநீர் செல்ல வழியின்றி, மழைநீரும், கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுவது ம், வீதிகளில் ஆறாக ஓடுவதும் இயல்பாக மாறிவிட்டது.''வீட்டுல குப்பை அதிகமாயிருச்சு'' என்று தெரிந்துவிட்டால், பெரிய பாலிதீன் கவரில் அடைத்து, ஏற்கனவே நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிக்கு அருகில், கொட்டி வரும் பழக்கம் இன்னும் அகல வில்லை. அவ்வாறு கொட்டியவுடன் மனதிற்குள்ளாக சாதித்துவிட்டதாய் பலரிடமும் எண்ணம் எழுகிறது.துளைகளுக்குள் புகாது நீர்முடிந்தவரை பாலிதீன் கவர்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம். வீட்டு உறுப்பினர்களுக்கு ஏன் ஒவ்வொருவரும் முன்மாதிரியாக இருக்கக்கூடாது. கொட்டும் மழைநீரும், தேங்கிய தண்ணீரும், நிலத்திற்குள் செல்வதற்கு வழியில்லாத அளவு நிலத்தின் துளைகளையெல்லாம், பாலிதீன் கழிவுகள் அடைத்துக்கொண்டு நிற்கின்றன. இதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.கடைகளில் பாலிதீன் கவர் கொடுக்கும்போது, அதை மறுப்பதோடு, 'இப்படி பாலிதீன் கவரை கொடுக்கிறீர்களே' என்று தனிப்பட்ட முறையில் கடைக்காரர்களிடம் அறிவுறுத்துவது கூடத் தவறு இல்லை.அவரவர் மனசாட்சிக்குத் தெரியும் அல்லவா, எது தப்பென்று!ஒவ்வொருவரும் அக்கறை காட்டுவோம்... பாடம் கற்றபின்பு, படிப்பினையை உணர்த்தவும், கற்றுத்தரவும் தயங்க வேண்டியதில்லைதானே!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X