வடியாத மழைநீர்... விதியென நோவதா... சதியென மாய்வதா?

Added : நவ 20, 2021
Share
Advertisement
சாலைகள் குளங்களாகி விட்டன; தரைப்பாலங்கள் மூழ்கிவிட்டன. கடந்த 17ம் தேதி திருப்பூரில் பெய்த பெருமழையில், பொதுமக்கள் திணறித்தான் போயினர். பலர், பணி முடிந்து திரும்பிக்கொண்டிருந்தனர்.சிறிய மழைக்கு கூட தாங்காத கட்டமைப்பைக் கொண்டதாகத்தான் திருப்பூர் இருக்கிறது. இத்தனைக்கும் மழைநீர் வடிந்துசெல்ல நொய்யல் குளங்களுடன் சேர்த்து ஏராளமான நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள்

சாலைகள் குளங்களாகி விட்டன; தரைப்பாலங்கள் மூழ்கிவிட்டன. கடந்த 17ம் தேதி திருப்பூரில் பெய்த பெருமழையில், பொதுமக்கள் திணறித்தான் போயினர். பலர், பணி முடிந்து திரும்பிக்கொண்டிருந்தனர்.சிறிய மழைக்கு கூட தாங்காத கட்டமைப்பைக் கொண்டதாகத்தான் திருப்பூர் இருக்கிறது. இத்தனைக்கும் மழைநீர் வடிந்துசெல்ல நொய்யல் குளங்களுடன் சேர்த்து ஏராளமான நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள் போன்றவற்றை முன்னோர் வடிவமைத்துக்கொடுத்து தான் சென்றிருக்கின்றனர்.பராமரிக்கப்படாத வடிகால்கள்தண்ணீர் தேங்கியிருப்பதற்கான முக்கியமான காரணங்களில் முக்கியமானதாக, மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதை சொல்லலாம்.வாய்க்கால் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டிருந்தால், மழை முடிந்த சில மணி நேரங்களுக்குள், தண்ணீர் முழுமையாக வடிந்திருக்க முடியும்.முன்பெல்லாம், பருவமழைக்காலம் என்றால் திட்டமிட்டு பணிபுரிந்துவந்த நிலை இருந்தது. ஆனால், தற்போது, பருவமழைக்காலம் துவங்கிய பின்தான், இதற்கான முன்னேற்பாடுகளே துவங்கப்படுகிறது. தற்போது பருவ கால மாற்றங்கள், எதிர்பாராததை எதிர்பார்க்கச் செய்வதாக மாறி வருகிறது.எதிர்பாராத பெருமழைகளை எப்போது வேண்டுமானாலும், சந்திக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.உலகளாவிய இயற்கைப் பேரிடர்கள், இவற்றை உணர்த்துகின்றன.எதிர்பாராததையும் எதிர்கொள்ளணும்திட்டமிடல்கள் பருவமழைக் காலங்களை மட்டும் கொள்வதாக இல்லாமல், எதிர்பாராத பெருமழைகளையும் கவனத்தில் கொள்வதாக அமைய வேண்டும். மழைநீர் வடிகால் மற்றும் பாதாளச்சாக்கடை பராமரிப்புகள் பெயரளவுக்கே மேற்கொள்ளப்படுகின் றன. இதனால், அடைப்புகள் அதிகமாகின்றன.முழுமையாக இவை அகற்றப்பட்டிருந்தால், அடைப்புகளுக்கு வாய்ப்பு இல்லை. எளிதாகமழைநீர் பயணித்து, நீராதாரத்தை அடைந்துவிடும். பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான் யதார்த்தம்.நொய்யல் உள்ளிட்ட நீராதாரங்களில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து செல்லும் மழைநீர் வடிகால்கள் வழியாக நீர்நிலைகளை அடைவதில்லை.தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது சிக்கலாகிறது. தண்ணீர் தேங்குவதால், மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. மின் தடை உள்ளிட்ட பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்குவது மட்டுமின்றி, சுகாதார சீர்கேடுகளும் உருவாகின்றன. தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டு விடுகிறது.முறையாக செலவிட வேண்டும்மழைக்கு பின், மாநகராட்சி உட்பட அரசின் பல்வேறு துறைகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவையாக இருக்கின்றன. அதேசமயம், திட்டமிடல்கள் என்பது, எதிர்பாராத பெருமழைகளையும் எதிர்கொள்வதற்கான திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.-----ஆண்டுதோறும் பருவமழை தீவிரமடையும் காலங்களில், வெள்ளம் ஏற்படுவதும், அதை சீராக்குவதற்கான நடவடிக்கைகளை துவக்குவதும், நிதி ஒதுக்குவதும் வாடிக்கையானதாக இருக்கிறது.இதற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவழிக்கப்பட்டிருந்தால், வெள்ள பாதிப்புகளை தடுத்திருக்க முடியும்.நிரந்தர தீர்வு மிக அவசியம்பருவமழை துவங்குவதற்கு முன்பு, வெள்ள பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் கண்டறியப்பட்டு உரிய நேரத்தில் துார்வாருதல், வடிகால் கட்டமைத்தல், தடுப்பு சுவர் கட்டுதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்பு செயல்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க சென்னையில் அமைத்தது போல், பேரிடர் மேலாண்மைக்குழு அமைத்து, திருப்பூரும் வெள்ளத்தால்பாதிக்கப்படாத வகையில், புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு வடிகால் அமைப்பது குறித்து ஆய்வுகள் செய்வது அவசியம்.வடியாத மழைநீருக்காக, விதியென நோகவோ, சதியென மாயவோ தேவையில்லை. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்காலிக நிவாரணமாக அமைந்ததே தவிர, நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை என்பதுதான் மூல காரணம். வெள்ள பாதிப்பிலிருந்து நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்பதே முக்கியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X