பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றும் மோட்டார்; சுழலும் தொழில்துறை

Added : நவ 20, 2021
Share
Advertisement
மின்சார மோட்டார் இல்லாத இடம் என்பதே இல்லை என்னும் அளவுக்கு அவை எல்லா இடங்களிலும் உள்ளன. அது -கிரைண்டர் ட்ரோன்கள் ஹைடெக் மெஷினரிகள் கார்கள் முதல் கடிகாரங்கள் வரை உங்கள் கணினியில் உள்ள குளிரூட்டும் விசிறி வரை நமது நவீன சமுதாயத்தை நகர்த்தும் பல சாதனங்களில் மின்சார மோட்டாரின் பங்கு முக்கியமானது.தற்போது இந்த மோட்டார் தொழில்நுட்பமானது நியோடைமியம் டிஸ்ப்ரோசியம்

மின்சார மோட்டார் இல்லாத இடம் என்பதே இல்லை என்னும் அளவுக்கு அவை எல்லா இடங்களிலும் உள்ளன. அது -கிரைண்டர் ட்ரோன்கள் ஹைடெக் மெஷினரிகள் கார்கள் முதல் கடிகாரங்கள் வரை உங்கள் கணினியில் உள்ள குளிரூட்டும் விசிறி வரை நமது நவீன சமுதாயத்தை நகர்த்தும் பல சாதனங்களில் மின்சார மோட்டாரின் பங்கு முக்கியமானது.
தற்போது இந்த மோட்டார் தொழில்நுட்பமானது நியோடைமியம் டிஸ்ப்ரோசியம் சமாரியம் ஸ்ட்ரோண்டியம் மற்றும் கோபால்ட் போன்ற அரிய வகை பூமி தனிமங்களை (rare earths) சார்ந்துள்ளது. அரிய வகை பூமி தனிமங்களை தோண்டி எடுப்பது சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மோசமாக்கும் ஒரு செயல்முறை. இதனால் பெங்களூரை சேர்ந்த சாரா டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட் அப் இந்தப் பிரச்னைகளை முடிவு கட்ட முன்வந்துள்ளது.
கடந்த 2019ல் துவக்கப்பட்ட சாரா டெக்னாலஜிஸ் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற அரிய வகை பூமி தனிமங்கள் இல்லாத மின்சார மோட்டார்களை வடிவமைத்தல் உருவாக்குதல் மற்றும் இவற்றை கிளவுட்- மூலம் கட்டுப்படுத்துதல் என்கிற வகையில் உருவாக்கி இருக்கிறது.
இது ஸ்விட்ச்டு ரிலக்டன்ஸ் மோட்டார்கள் (SRMகள்) காந்தம் இல்லாத தொழில் நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் எளிமையாகவும் இருப்பதை உறுதிசெய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதை இந்த நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.என்ன புதுமைமோட்டார்களில் உள்ள ஸ்டேட்டர், ரோட்டரின் திறமையான மறுவடிவமைப்பு. காந்தம் இல்லாத நிலையில் அதிக வெப்பநிலையிலும் செயல்படும் திறன் கொண்டது.

அதாவது கட்டுப்பாடு மற்றும் சென்சார் இல்லாத வடிவமைப்புக்கான புதிய அல்காரிதம்கள்.அரிய வகை -பூமி தனிமங்கள் இல்லாத மோட்டார் தொழில்நுட்பத்துடன் இந்த நிறுவனம் ஒரு நூற்றாண்டு பழமையான தொழிலில் புதுமையான தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டுள்ளது.இவர்களின் 'பண்டிங்' சாரா டெக்னாலஜிஸ் கலாரி கேபிடல் மூலம் 6.2 கோடி ரூபாய் 'சீட் கேபிடலாக' பெற்றுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.chara.co.in எனும் இணையதளத்தில் பார்க்கலாம்.
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com.www.startupandbusiness news.com.

மொபைல் போன்: 98204 51259.
- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X