செய்தி செய்தி

தமிழ்நாடு

நகர உள்ளாட்சி தேர்தல் 25ல் வாக்காளர் பட்டியல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்: பரபரப்பாக எதிர்பார்க்கப்படும், மாநகராட்சி தேர்தலுக்கான, வார்டு வாரியான வாக்காளர் பட்டியல், 25ம் தேதி வெளியிடப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு, எந்நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற உறுதியான நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர், கோவை - திருப்பூர் மாவட்டங்களுக்கு வந்து, நல உதவி வழங்குவதன் மூலம், தேர்தல் வரப்போவது உறுதி என்று, கட்சியினர் கங்கணம்

திருப்பூர்: பரபரப்பாக எதிர்பார்க்கப்படும், மாநகராட்சி தேர்தலுக்கான, வார்டு வாரியான வாக்காளர் பட்டியல், 25ம் தேதி வெளியிடப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு, எந்நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற உறுதியான நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர், கோவை - திருப்பூர் மாவட்டங்களுக்கு வந்து, நல உதவி வழங்குவதன் மூலம், தேர்தல் வரப்போவது உறுதி என்று, கட்சியினர் கங்கணம் கட்டிவிட்டனர்.விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், கடந்த சில வாரங்களாக, அ.தி.மு.க.,வினர் மீண்டும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியுள்ளனர். தி.மு.க., வினர், ஆலோசனை கூட்டம் நடத்த துவங்கிவிட்டனர். ஏற்கனவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான, ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக, கட்சியினர் கூறினர்; மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து முறையான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.பரபரப்பான இந்த சூழலில், வரும் 25ம் தேதி, வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.மாநகராட்சியில், 60 வார்டுகள்; ஐந்து நகராட்சிகளில், 231 வார்டுகள்; 16 பேரூராட்சிகளில், 246 வார்டுகளுக்கு, வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட இருக்கிறது. அதன்மூலமாகவே, வார்டு எல்லைகளை உறுதி செய்து கொள்ள முடியுமென, கட்சியினர் காத்திருக்கின்றனர்.தலைவர் தேர்வு எப்படி?இறுதியாக வந்த அரசாணைப்படி, மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 559 பதவிகளுக்கு தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் தயாராகிவிட்டது. தி.மு.க.,வின் 'பார்முலா' அடிப்படையில், கவுன்சிலர்களில் இருந்து மேயர் மற்றும் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டால், 537 பதவிகளுக்கு தேர்தல் நடக்குமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X