சந்திராபூர்-மஹாராஷ்டிராவில் புலிகள் கணக்கெடுப்பு பணியின்போது, பெண் வனக்காவலரை புலி அடித்துக்கொன்றது.

மஹாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டம் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில், அவற்றை கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக பெண் வனக்காவலர் சுவாதி துமானே மற்றும் மூன்று பணியாளர்கள் நேற்று காலை வனப்பகுதிக்குள் சென்றனர். காப்பகத்தின் நுழைவு பகுதியில் இருந்து 4 கி.மீ., உள்ளே சென்ற அவர்கள், 200 மீ., துாரத்தில் பெண் புலி அமர்ந்திருப்பதை கவனித்தனர்.

அதன் வழியில் குறுக்கிடாமல் காத்திருந்தனர். புலி அங்கிருந்து செல்லாததால், அவர்கள் வேறு பாதையில் பயணத்தை தொடர்ந்தனர். அப்போது திடீரென பாய்ந்த புலி, சுவாதியை அடித்துக்கொன்று வனப்பகுதிக்குள் இழுத்துச்சென்றது. தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சுவாதியின் உடலை மீட்டனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து புலிகள் கணக்கெடுப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE