உபரி நீர் வெளியேறும் நீர் வழிப்பாதை மாயம்: மீட்டெடுக்க விஜயாபுரம் மக்கள் வேண்டுகோள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்: விஜயாபுரம் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்ல, ஆக்கிரமிப்பிலுள்ள நீர் வழித்தடத்தை மீட்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:விஜயாபுரத்தில் உள்ள குளத்தில், மழைநீர் தேங்கினால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாய தொழிலுக்கு மிகவும் பயன்பட்டது. ஆனால், தற்போது இக்குளம் பொதுக்கழிவுகள்

திருப்பூர்: விஜயாபுரம் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்ல, ஆக்கிரமிப்பிலுள்ள நீர் வழித்தடத்தை மீட்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:விஜயாபுரத்தில் உள்ள குளத்தில், மழைநீர் தேங்கினால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாய தொழிலுக்கு மிகவும் பயன்பட்டது. ஆனால், தற்போது இக்குளம் பொதுக்கழிவுகள் மற்றும் கழிவு நீர் தேக்கத்துக்கு மட்டுமே பயன்படுகிறது. அருகிலுள்ள மாங்கரை அம்மன் நகர், லோட்டஸ் பார்க் மற்றும் பல இடங்களில் மாநகராட்சி குப்பை தொட்டிகள் கிடையாது.இதனால், மக்கள் அனைவரும் குப்பையை இக்குளத்தில் கொட்டுகின்றனர். கிராமத்தின் வளர்ச்சியினாலும் மக்கள் பெருக்கத்தாலும் குளம் கழிவு நீரால் நிரம்பி விட்டது. இதனால், சில ஆண்டுகளாக நிலத்தடி நீரின் தன்மை மாறி வருகிறது.தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், உபரி நீர் செல்ல முறையான நீர் வழிப்பாதை இல்லாத காரணத்தினால் தற்போது விவசாய நிலங்கள், மக்கள் வசிக்கும் வீடுகளுக்கும் செல்ல ஆரம்பித்து விட்டது.எனவே, குளத்தின் உபரி நீர் செல்ல முறையான நீர் வழிப்பாதை அமைக்க வேண்டும். ஏற்கனவே, இருந்த வழி முற்றிலும் ஆக்கிரமிப்பாலும், துார்வாரப்படாத காரணத்தினாலும் கழிவு நீர் செல்ல வழி இல்லை.இந்த நீர் வழித்தடம் நொய்யல் ஆறு வரை செல்கிறது. எனவே, குளம் மற்றும் உபரிநீர் செல்லும் வழியையும் துார்வாரினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து, கலெக்டர், பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X