செய்தி செய்தி

தமிழ்நாடு

யார்னெக்ஸ் கண்காட்சி 8 ஆயிரம் பேர் பார்வை !

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்: மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு தேவையான நுால், துணிகளை அறிமுகப்படுத்திய யார்னெக்ஸ் கண்காட்சி நேற்று முடிவடைந்தது; மூன்று நாட்களில், தமிழகம் மற்றும் கேரள ஜவுளித்துறையினர் 8,300 பேர் பார்வையிட்டுள்ளனர்.எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடியா சார்பில், யார்னெக்ஸ் நுால் மற்றும் துணி கண்காட்சி, திருப்பூர் அடுத்த பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் கடந்த 18ல் துவங்கி

திருப்பூர்: மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு தேவையான நுால், துணிகளை அறிமுகப்படுத்திய யார்னெக்ஸ் கண்காட்சி நேற்று முடிவடைந்தது; மூன்று நாட்களில், தமிழகம் மற்றும் கேரள ஜவுளித்துறையினர் 8,300 பேர் பார்வையிட்டுள்ளனர்.எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடியா சார்பில், யார்னெக்ஸ் நுால் மற்றும் துணி கண்காட்சி, திருப்பூர் அடுத்த பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் கடந்த 18ல் துவங்கி நடந்துவந்தது.தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள நுாற்பாலை, துணி உற்பத்தியாளர்கள், 112 ஸ்டாலில், நுால், துணி ரகங்களை காட்சிப்படுத்தினர்.பாலியெஸ்டர், விஸ்கோஸ், மொடால் உட்பட பல்வேறு செயற்கை நுாலிழை, துணி ரகங்கள்; மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு நுாலிழை, ஆடை ரகங்கள். ஆடை தயாரிப்புக்கு தேவையான அக்சசரீஸ், துணியின் தரத்தை கண்டறிய பயன்படும் நவீன ஆய்வக கருவிகள் இடம்பெற்றிருந்தன.திருப்பூர் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி துறையினர், ஜாப்ஒர்க் நிறுவனத்தினர், சேலம், கரூர், ஈரோடு, திருநெல்வேலி, நாமக்கல் உட்பட தமிழகம் மற்றும் கேரளா பகுதி ஜவுளித்துறையினர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இக்கண்காட்சி நேற்று இரவு, 7:00 மணியுடன் நிறைவடைந்தது.'மூன்று நாள் கண்காட்சியை, மொத்தம் 8,300 பேர் பார்வையிட்டுள்ளனர். மதிப்பு கூட்டு ஆயத்த ஆடை தயாரிப்புக்கு தேவையானநுால், துணி கொள்முதல் செய்வது குறித்து, ஸ்டால் அமைந்திருந்த நிறுவனத்தினருடன் வர்த்தக விசாரணைகள் நடத்தியுள்ளனர்' என, எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடிய நிறுவன இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X