துளிகள் செய்தி

தமிழ்நாடு

கம்பியை கவனித்து வாங்க வேண்டும்!

Added : நவ 20, 2021
Share
Advertisement
வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களில் முக்கியமானவை கம்பியும் சிமெண்ட்டும். நம்மில் பெரும்பாலானோர் சிமென்ட் பற்றி அறிந்து கொண்ட அளவு கம்பியை பற்றி அறிந்ததில்லை. அழுத்தக்கூடிய விசையை கான்கிரீட் சமாளிப்பதை போல இழுக்கக்கூடிய விசையை கம்பி சமாளிக்கிறது.இந்த அடிப்படையின்படி தேவையான அளவு உறுதி தன்மையில் கான்கிரீட்டும் கம்பியும் கம்பி வரைபடத்தில் (STRUCTURAL DRAWING)

வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களில் முக்கியமானவை கம்பியும் சிமெண்ட்டும். நம்மில் பெரும்பாலானோர் சிமென்ட் பற்றி அறிந்து கொண்ட அளவு கம்பியை பற்றி அறிந்ததில்லை. அழுத்தக்கூடிய விசையை கான்கிரீட் சமாளிப்பதை போல இழுக்கக்கூடிய விசையை கம்பி சமாளிக்கிறது.இந்த அடிப்படையின்படி தேவையான அளவு உறுதி தன்மையில் கான்கிரீட்டும் கம்பியும் கம்பி வரைபடத்தில் (STRUCTURAL DRAWING) கணக்கிடப்பட்டு காண்பிக்கப்படுகின்றன. இந்த கட்டுரையில் இன்றைய சூழலில் கம்பியை எந்த அடிப்படையில் நாம் வாங்க வேண்டும் என பார்க்கலாம்.டி.எம்.டி., கம்பிகள்முன்பு நாம் முறுக்கு கம்பிகளைக் கடைகளில் பார்த்திருக்கிறோம். தற்போது, கூடுதல் நற்பண்புகளை கொண்ட புதிய தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்படும் டி.எம்.டி., (THERMO MECHANICALLY TREATED-TMT) கம்பிகள் கிடைக்கின்றன. இவை பல அறிவியல் அடிப்படைகளின்படி சிறந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.இந்தக் கம்பிகள் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைக் கவனித்து வாங்க வேண்டியது ஒரு நுகர்வோராக நம்முடைய கடமை. கம்பி தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் சந்தை நிலவரத்தை பொறுத்து கம்பி விலையை நிர்ணயிக்கிறது.நமக்கு எது தேவை என்பதை அறிந்து உணர்ந்து அதன்படி வாங்க வேண்டியது நம்முடைய தெளிவு.குறியீடுகள்கம்பியின் அடிப்படையான தரம் குறித்து சந்தையில் வெளிப் படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு இன்று கம்பியை Fe 500 / Fe 500 D / Fe 550 / Fe 550 D என்று பல விதங்களில் குறிப்பிடுகிறார்கள். இந்தக் குறியீடுகள் எவற்றை உணர்த்துகின்றன என்பதை நாம் அறிய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X