வேளாண் சட்டங்கள் வாபஸ்; இந்திராவின் தவறை தவிர்த்த மோடி

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதுடன், விவசாயிகளிடம் மன்னிப்பும் கேட்டார் பிரதமர் மோடி.'பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோடி' என விமர்சிக்கின்றனர் எதிர்க்கட்சியினர். சட்டசபை தேர்தல் ஒரு காரணமாக இருந்தாலும், வேறொரு முக்கிய காரணத்தையும் கட்சியின்

புதுடில்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதுடன், விவசாயிகளிடம் மன்னிப்பும் கேட்டார் பிரதமர் மோடி.



latest tamil news


'பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோடி' என விமர்சிக்கின்றனர் எதிர்க்கட்சியினர். சட்டசபை தேர்தல் ஒரு காரணமாக இருந்தாலும், வேறொரு முக்கிய காரணத்தையும் கட்சியின் சீனியர் தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


latest tamil news


வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் செய்து வருபவர்களில் அதிகம் பேர் சீக்கியர்கள்.'விவசாயிகள் போராட்டம் என்கிற போர்வையில் சீக்கிய தீவிரவாதம் தலை துாக்கத் துவங்கியுள்ளது. இதற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. எனவே, இந்த விஷயத்தில் கவனம் தேவை. 'இல்லையெனில் ஒழிந்து போன காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீண்டும் தீவிரவாத செயல்களை தொடர வாய்ப்புள்ளது' என, உளவு அமைப்புகள் அளித்த அறிக்கையே, மோடியின் இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

'காங்கிரசைச் சேர்ந்த இந்திரா பிரதமராக இருந்தபோது, சீக்கியர்கள் விஷயத்தில் தவறான அணுகுமுறையை பின்பற்றி, பெரும் விளைவுகள் ஏற்பட்டன. தற்போது மோடி அது போன்ற தவறை செய்யாமல் தவிர்த்துள்ளார்' என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
24-நவ-202113:51:09 IST Report Abuse
Samathuvan நீங்கள் சொன்னது விவசாயிகளுக்கு புரியல, ஆனால் இப்ப செய்தது எங்களுக்கு ரொம்ப புரிஞ்சிருச்சு. யோசிங்க நல்லா ரூம் போட்டு யோசிங்க ஆனாலும் இந்தமுறை கஷ்டம்தான்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-நவ-202119:38:03 IST Report Abuse
Bhaskaran சும்மா பத்தை கட்டவேண்டாம் உ.பி தேர்தல் தான் காரணம்
Rate this:
Cancel
21-நவ-202117:27:35 IST Report Abuse
அப்புசாமி அரசிய்ல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X