ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கில் 'தொய்வு': கேரள பா.ஜ., தலைவர் ஆவேசம்

Added : நவ 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பாலக்காடு: ''பாலக்காடு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கில் போலீஸ் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக'' கேரள பா.ஜ. தலைவர் சுரேந்திரன் குற்றம் சாட்டினார்.கேரள மாநிலம் பாலக்காடு அருகே எலப்புள்ளியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித் 27, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.இவரது, வீட்டிற்கு நேற்று கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் வந்தார். சஞ்ஜித் மனைவி, தாய்

பாலக்காடு: ''பாலக்காடு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கில் போலீஸ் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக'' கேரள பா.ஜ. தலைவர் சுரேந்திரன் குற்றம் சாட்டினார்.



latest tamil news



கேரள மாநிலம் பாலக்காடு அருகே எலப்புள்ளியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித் 27, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.இவரது, வீட்டிற்கு நேற்று கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் வந்தார். சஞ்ஜித் மனைவி, தாய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சஞ்ஜித் கொலை செய்யப்பட்டபோது, அப்பகுதியில் ஒரு போலீஸ்காரர் இருந்துள்ளார். இது தெரிந்தும், போலீசார் குற்றவாளிகளை தப்பவிட்டுள்ளனர். கொலை சம்பவம் பதிவான சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் இருந்தும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க திணறுகின்றனர். இவை போலீஸ் விசாரணையின் தொய்வினை காட்டுகிறது.


latest tamil news



இதில், ஆளும் மா.கம்யூ.,வின் அழுத்தம் உள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதில் போலீஸ் தாமதம் செய்தால், மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க கோரி நாளை (22ம் தேதி ) மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளோம்.இவ்வாறு, சுரேந்திரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-நவ-202121:41:51 IST Report Abuse
பேசும் தமிழன் நடப்பது அவர்களின் கூட்டாளி ஆட்சி... பிறகு எப்படி குற்றவாளிகளை கைது செய்வார்கள்???
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
21-நவ-202117:39:59 IST Report Abuse
Srivilliputtur S Ramesh ஒரு மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர் இதே போல கொலை செய்யப்பட்டிருந்தால், கேரள காவல்துறை எத்தனை வேகமாக செயல்பட்டிருக்கும் ?? ஹிந்துக்கள் என்றால் அவ்வளவு கேவலமா ? ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால், இந்த கம்யூனிஸ்டுகளை ஒழிக்க முடியும்...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-நவ-202112:56:56 IST Report Abuse
Lion Drsekar இது பெரிய இடத்து விவகாரம் அமைதியே சாலச்சிறந்தது,. வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X