சமூக விரோதிகள் மீது நடவடிக்கை: கோவை போலீஸ் கமிஷனர் உறுதி | Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

சமூக விரோதிகள் மீது நடவடிக்கை: கோவை போலீஸ் கமிஷனர் உறுதி

Added : நவ 21, 2021
Share
கோவை: 'கோவை அமைதியான நகரமாக இருக்க சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' எனபுதிய போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த தீபக் தாமோர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.இதனால், சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பணியாற்றிய பிரதீப்குமார் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக

கோவை: 'கோவை அமைதியான நகரமாக இருக்க சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' எனபுதிய போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த தீபக் தாமோர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.இதனால், சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பணியாற்றிய பிரதீப்குமார் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், நேற்று மாலை கோவைபோலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். போலீசாரின் மரியாதையை ஏற்றார். தனது அறைக்கு சென்று கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார்.இதன்பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில்,'கோவையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க சிறப்பான கவனம் செலுத்தப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கோவையை அமைதியான மாநகரமாக வைக்க சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும்' என்றார்.புதிய போலீஸ் கமிஷனருக்கு துணை கமிஷனர்கள் ஜெயசந்திரன், உமா, செந்தில் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X