மம்தா கட்சிக்கு தாவும் தமிழக பிரமுகர்| Dinamalar

மம்தா கட்சிக்கு தாவும் தமிழக பிரமுகர்

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (18)
Share
புதுடில்லி: திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தற்போது மற்ற மாநிலங்களிலும் கட்சியை வளர்க்க முயற்சி எடுத்து வருகிறார்.உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா சட்டசபை தேர்தல்களிலும் தன் கட்சி வேட்பாளர்களை நிறுத்த தயாராகி வருகிறார். காங்கிரஸ் கட்சி தலைவர்களை தன் பக்கம் இழுத்து, அவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளை வழங்கி வருகிறார்.இந்நிலையில்

புதுடில்லி: திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தற்போது மற்ற மாநிலங்களிலும் கட்சியை வளர்க்க முயற்சி எடுத்து வருகிறார்.



latest tamil news


உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா சட்டசபை தேர்தல்களிலும் தன் கட்சி வேட்பாளர்களை நிறுத்த தயாராகி வருகிறார். காங்கிரஸ் கட்சி தலைவர்களை தன் பக்கம் இழுத்து, அவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்திலும் தன் கட்சியை நிலைநிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஒரு பிரபல மூத்த தலைவர் தான் இப்போதைக்கு மம்தாவின் குறி. ஒரு காலத்தில் இந்த தலைவரின் ஆலோசனையை கட்சி தலைமை கேட்டு, தேசிய அளவில் முடிவெடுத்து வந்தது. ஆனால், இப்போது சுத்தமாக ஓரங்கட்டப்பட்டு அதிருப்தியாளராகி விட்டார்.


latest tamil news


ஒரு முக்கிய பதவியில் இருக்கும் இந்த தமிழக பிரமுகரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மத்தியில் முடிவடைகிறது. 'அந்த பதவியில் மீண்டும் அமர்த்தி விடுகிறேன்; என் கட்சிக்கு வந்துவிடுங்கள்' என, அந்த பிரமுகருக்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தா. விரைவில் இந்த தமிழக பிரமுகர் கோல்கட்டா சென்று மம்தாவை சந்திக்க வாய்ப்புள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X