'ஸ்டார்ட் அப் துவக்குவதில் இந்தியாவுக்கு 3வது இடம்'

Added : நவ 21, 2021
Share
Advertisement
சரவணம்பட்டி: கோவை எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.கல்வி நிறுவனங்களின் தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். விழாவில், பட்டங்களை வழங்கி மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் ஆலோசகர் சஞ்சிவ் குமார் வர்ஷ்னே பேசியதாவது:கோவிட் தொற்றுக்கு பின், சர்வதேச அளவில் பல்வேறு மாற்றங்கள்

சரவணம்பட்டி: கோவை எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.கல்வி நிறுவனங்களின் தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். விழாவில், பட்டங்களை வழங்கி மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் ஆலோசகர் சஞ்சிவ் குமார் வர்ஷ்னே பேசியதாவது:கோவிட் தொற்றுக்கு பின், சர்வதேச அளவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டிஜிட்டல் மீடியாக்களின் பிரசாரங்கள், மக்களை எளிதாக சென்றடைந்துள்ளன. தொற்று ஏற்பட்டு உலகம் முடங்கியபோதும், இந்தியாவின் ஸ்டார்ட் அப் சிந்தனைகள் உயர்ந்துள்ளன.இதன்படி, சர்வதேச அளவில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் பல நிறுவனங்களை இந்தியர்கள் உருவாக்கியுள்ளனர். அல்லது முக்கிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் உள்ளனர். இவை எல்லாம் இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தை எடுத்துக் காட்டுகின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.கல்லுாரி தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் நளின் விமல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X