திருமணம் செய்ய வலியுறுத்தி இளைஞர் மீது ஆசிட் வீசிய கேரள பெண் கைது இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் ( 27) , இவருக்கும் ஷீபா என்பவருக்கும் பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்தது. இதில் பின்னர் தான் தெரிந்தது. ஷீபா ஏற்கனவே திருமாணவர் என்று. இதனால் உறவை முறித்து கொள்ள அருண்குமார் முயற்சித்தார். இது இருவருக்கும் இடையே மோதலாக வெடித்தது. இந்நிலையில் ஷீபா பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இது தொடர்பாக ஒரு
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் ( 27) , இவருக்கும் ஷீபா என்பவருக்கும் பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்தது. இதில் பின்னர் தான் தெரிந்தது. ஷீபா ஏற்கனவே திருமாணவர் என்று. இதனால் உறவை முறித்து கொள்ள அருண்குமார் முயற்சித்தார். இது இருவருக்கும் இடையே மோதலாக வெடித்தது. இந்நிலையில் ஷீபா பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இது தொடர்பாக ஒரு ஆலயத்தில் சந்திக்க வந்தபோது அருண்குமார் மீது ஷீபா மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவரது முகத்தில் வீசினார். இதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அருண் சேர்க்கப்பட்டார். இவரது கண் பார்வை இழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷீபாவை கைது செய்தனர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது.

சாலை விபத்து: 5 பேர் பலி

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டம் வாலானா அருகே, நேற்று காலை பயணியர் வேன் மீது டேங்கர் லாரி மோதியது. விபத்தில், வேனில் இருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நால்வர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். வழியில் மற்றொருவர் இறந்ததால், பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது; மூவருக்கு சிகிச்சை தொடர்கிறது.

தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு

லதேஹர்: ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டம் ரிச்சுகுடா மற்றும் டெமு ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் பலத்த சேதம் அடைந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; சீரமைப்பு பணிகள் தொடர்கிறது. தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் பயங்கரவாதிகளின் தலைவர் பிரசாந்த் போஸ் சமீபத்தில் கைதானார். இதை கண்டித்து நேற்று தேசிய அளவிலான 'பந்த்'திற்கு அழைப்பு விடுத்திருந்த பயங்கரவாதிகள் தண்டவாளத்தை தகர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அஷ்முஜி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்புப் படையினர், நேற்று காலை தேடுதல் வேட்டையை துவங்கினர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.


latest tamil newsதமிழக நிகழ்வுகள்

திருச்சி அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை
திருச்சி: திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை கீரனூர் அருகே ஆடும் திருடும் கும்பல் ஒன்றினை விரட்டிச் சென்ற போது அக்கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்

கணவரை உயிரோடு புதைத்தாரா மனைவி மகள் புகாரால் போலீசார் விசாரணை
சென்னை:ஜீவ சமாதி அடைந்ததாக கூறப்படும் குறி சொல்பவர் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. முன்னுக்கு பின் முரணாக பதில் கூறும் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை பெரும்பாக்கம் கலைஞர் நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் 58. இவரது மனைவி லட்சுமி 45. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.மகன் துபாயில் பணிபுரிகிறார். மகள் தமிழரசி 24 சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். நாகராஜ் குறி சொல்லி சாமி ஆடி வந்துஉள்ளார்.
கடந்த 17ம் தேதி நாகராஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது 'நான் இறந்து விடுவேன்; வீட்டின் கொல்லை புறத்தில் குழிதோண்டி ஜீவ சமாதியாக புதைக்க வேண்டும். பிள்ளைகளுக்கு தெரிய வேண்டாம்' என நாகராஜ் லட்சுமியிடம் சத்தியம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தோண்டிய குழியில்நாகராஜ் படுக்க லட்சுமி மண்ணை மூடி சமாதி ஆக்கியதாக கூறப்படுகிறது. பணிக்கு சென்று திரும்பிய தமிழரசி தந்தை குறித்து கேட்டுள்ளார்.அவர் வெளியே சென்றதாக லட்சுமி கூறி உள்ளார். மறுநாள் வரை வீடு திரும்பாததால் தாயிடம் கோபமாக கேட்டுள்ளார். அப்போது தந்தை ஜீவ சமாதி அடைந்ததாக லட்சுமி கூறி உள்ளார்.
சந்தேகமடைந்த தமிழரசி பெரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேற்று தாம்பரம் தாசில்தார் பாலாஜி அரசு மருத்துவர் நாகநந்தினி மற்றும் போலீசார் முன்னிலையில் நாகராஜ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசார் லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி வந்தார். இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேதப்படுத்திய மரங்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனி- -தேனி வருஷநாடு, தும்மக்குண்டு ஊராட்சியில் வீரசின்னம்மாள்புரம், வாலிப்பாறை கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் தோட்டங்களில் கொட்டை முந்திரி, இலவம், எலுமிச்சை மரங்கள் நட்டு பராமரித்தனர். நேற்று முன்தினம் வனத்துறையினர் 6 அடி உயரம் வளர்ந்த 3500 மரங்களை வெட்டி சேதப்படுத்தினர். ஆத்திரமடைந்த விவசாயிகள் ஊராட்சி தலைவர் சின்னக்காளை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டச் செயலாளர் வெங்கடேசன்,் ராஜப்பன் தலைமையில், வெட்டிய மரங்களோடு தேனி கலெக்டர் அலுவலகம் முன் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின், ஊராட்சித் தலைவர் தலைமையில் கலெக்டர் முரளீதரனிடம் மனு அளித்து கூறுகையில், ''ரூ.2 கோடி மதிப்புள்ள மரங்களை வெட்டி சேதப்படுத்திய வனத்துறையினரை கைது செய்ய வேண்டும். வனத்துறை இடையூறால், ஊராட்சி மன்றத்திற்கே என்னால் செல்ல முடியவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும்'' என்றார்.

மானாமதுரையில் நோயால் 20 பசுக்கள் இறந்தன

மானாமதுரை-மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை மற்றும் சங்கமங்கலம் பகுதிகளில் நோய் தாக்கி 20 க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கீழப்பசலை, சங்கமங்கலம் பகுதிகளில் ஏராமான விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகின்றனர்.இந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மாடுகளுக்கு காணை நோய் எனப்படும் ஒரு விதமான அம்மை நோய் தாக்கி 20 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.100 க்கும் மேற்பட்ட மாடுகள்நோய் தாக்கி சிரமப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மாடுகளுக்கு கானை நோய் தாக்கி மாடுகள் நிற்கவும், நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டு இறந்து வருகின்றன. ஆகவே கால்நடை துறை அதிகாரிகள் இந்த பகுதியில் பரவி வரும் இந்த நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சுரபி நர்ஸிங் கல்லூரிக்கு சீல்
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரை யொட்டி சுரபி நர்ஸிங் கல்லுாரிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது. தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் -- பழநி சாலையில் முத்தனம்பட்டியில் சுரபி நர்ஸிங் கல்லுாரி உள்ளது. இதன் தாளாளர் ஜோதிமுருகன் 42, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்தனர். தாளாளர் ஜோதிமுருகன் தலைமறைவானார்.

மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் டி.ஐ.ஜி., விஜயகுமாரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் , பெற்றோரிடம் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ''தாளாளர் ஜோதிமுருகன் விரைவில் கைது செய்யப்படுவார். அதன்பின் விசாரணை குழு அமைத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என, உறுதியளித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் கல்லுாரிக்கு தற்காலிகமாக 'சீல்' வைக்கப்பட்டது.தனிப்படை அமைப்புதாளாளர் ஜோதிமுருகனை பிடிக்க தனிப்பிரிவு எஸ்.ஐ., மாரிமுத்து, இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் ஒரு தனிப்பிரிவு என 5 தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


latest tamil news


பாலத்தை சூழ்ந்த நுரை: போக்குவரத்து நிறுத்தம்

ஓசூர்:ஓசூர் அருகே, தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட ரசாயன நுரை, தரைமட்ட பாலத்தில் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 3,000 கன அடி நீர்வரத்து இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, நீர் முழுதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதனால் பெருமளவு ரசாயன நுரை, அணைக்கு எதிரே உள்ள தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தில் தேங்கியது. போக்குவரத்து பாதித்ததால், தீயணைப்புத் துறையினர் நுரையை அகற்றினர்.
அணைக்கு நீர்வரத்து, 2,563 கன அடியாக சரிந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர்இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில், 3,060 கன அடி நீர்திறக்கப்பட்டது.நேற்றும் ஆற்றில் அதிகளவு ரசாயன நுரை ஏற்பட்டு, பல அடி உயரத்திற்கு தட்டகானப்பள்ளி தரைப்பாலம் தெரியாத அளவிற்கு சூழ்ந்தது. எனவே, அவ்வழியாக செல்லும், பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. அதிகாரிகள் யாரும் பார்வையிட்டு, நுரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

மரத்தில் கார் மோதி விபத்து: டாக்டர் உட்பட இருவர் பலி

ஓசூர்:தேன்கனிக்கோட்டை அருகே கார் மரத்தில் மோதியதில், டாக்டர் உட்பட இருவர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் மஞ்சுநாத், 22, எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த இவர் தனியார் மருத்துவமனையில் பணியில் சேர இருந்தார். இந்நிலையில் பெங்களூரில் நடந்த ஒரு திருமண வரவேற்பில் பங்கேற்க மஞ்சுநாத் சென்றார். நண்பர்கள் பரத், 21, வேதாந்து, 21, கோகுல், 22, ஆகியோரும் உடன் சென்றனர்.

நேற்று அதிகாலை, 'மாருதி சுசூகி பலேனோ' காரில் ஊர் திரும்பினர்.காரை கோகுல் ஓட்டினார். ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலை தண்டரை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியது. இதில் பரத் பலியானார். படுகாயமடைந்த மஞ்சுநாத் உட்பட மூன்று பேரையும் மீட்டவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட மஞ்சுநாத் உயிரிழந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
21-நவ-202118:14:36 IST Report Abuse
THINAKAREN KARAMANI இத்தனைநாளாக ஆண்கள் ஆசிட் விசினார்கள் என்று செய்திகள் வந்தன. இப்போது பெண்களும் ஆசி வீச ஆரம்பித்து விட்டார்களா? THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-நவ-202114:46:25 IST Report Abuse
S.Baliah Seer இவள் ஒரு பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவள்.
Rate this:
Cancel
Nagaraj - Doha,கத்தார்
21-நவ-202113:43:11 IST Report Abuse
Nagaraj கேரளாவில் எல்லாமே உல்டா.... ஆசிட் வீச்சு சம்பவம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X