மாடு திருடிய ஆசாமி போலீசில் ஒப்படைப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பல்லடம்: சுல்தான்பேட்டை ஒன்றியம், வாரப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 55; விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று காணாமல் போனது. இதுகுறித்து அறிந்த ராமசாமி, வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தினார்.விவசாயிகள் இதுகுறித்து விசாரித்து வந்த நிலையில், மாயமான மாடு காமநாயக்கன்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரை

பல்லடம்: சுல்தான்பேட்டை ஒன்றியம், வாரப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 55; விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று காணாமல் போனது.
இதுகுறித்து அறிந்த ராமசாமி, வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தினார்.விவசாயிகள் இதுகுறித்து விசாரித்து வந்த நிலையில், மாயமான மாடு காமநாயக்கன்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சக்திகணேஷ், 40 என்பவரின் வீட்டில் கட்டப்பட்டிருந்ததை விவசாயிகளே கண்டுபிடித்தனர்.உடனடியாக, விவசாயிகள் ஒன்று திரண்டு பசுமாட்டை மீட்டு வந்தனர். விசாரணையில், அவரே பசுமாட்டை திருட வந்தது 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில் உறுதியானது.விவசாயிகள் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளுக்கு முன், முன்னாள் எம்.எல்.ஏ., கனகராஜூக்கு சொந்தமான நான்கு பசு மாடுகளை திருடி உள்ளார். இதேபோல், பல இடங்களில் மாடுகளை திருடி விற்றுள்ளார்.இருந்தும், போலீசார் இவரை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 'சிசிடிவி' காட்சி மூலம் பிடிபட்ட இவரை, சுல்தான்பேட்டை போலீசில் ஒப்படைத்துள்ளோம். போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X