கலாம் வனத்தில் மரக்கன்று நடவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பல்லடம்: பல்லடம் வனாலயத்தில் உள்ள அப்துல்கலாம் வனத்தில், மாணவ, மாணவியர் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.சர்வதேச 'நமது சேவை' அறக்கட்டளை மற்றும் திருமாறன் கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, 'அப்துல்கலாம் அன்பு வனம்' பல்லடம் வனாலயம் வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அக்., 17 அன்று கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அப்துல்கலாம் வனம்

பல்லடம்: பல்லடம் வனாலயத்தில் உள்ள அப்துல்கலாம் வனத்தில், மாணவ, மாணவியர் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.சர்வதேச 'நமது சேவை' அறக்கட்டளை மற்றும் திருமாறன் கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, 'அப்துல்கலாம் அன்பு வனம்' பல்லடம் வனாலயம் வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அக்., 17 அன்று கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அப்துல்கலாம் வனம் உருவாக்கப்பட்டு, 90 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இரண்டாம் கட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.வனம் அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயந்தி பள்ளி தாளாளர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவ, மாணவியர், அப்துல் கலாம் வனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வனம் அமைப்பு நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X