பட்டாசு வெடித்து விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:வேளாண் சட்ட திருத்தம் திரும்ப பெறப்படுமென அறிவித்ததால், விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.வேளாண் சட்ட திருத்தம் திரும்ப பெறப்படும் என, பிரதமர் மோடி அறிவித்தார். கடந்த ஓராண்டாக நடந்து வரும், போராட்டம் வெற்றி பெற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், திருப்பூர் அலுவலகத்தின் முன் பட்டாசு

திருப்பூர்:வேளாண் சட்ட திருத்தம் திரும்ப பெறப்படுமென அறிவித்ததால், விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.வேளாண் சட்ட திருத்தம் திரும்ப பெறப்படும் என, பிரதமர் மோடி அறிவித்தார். கடந்த ஓராண்டாக நடந்து வரும், போராட்டம் வெற்றி பெற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், திருப்பூர் அலுவலகத்தின் முன் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.இதுகுறித்து சங்க தலைவர் ஈசன் கூறுகையில், ''பிரச்னைக்குரிய வேளாண் சட்ட திருத்தத்தை திரும்ப பெறுவதாக, பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். கடந்த ஓராண்டாக நடக்கும் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இருப்பினும், பாராளுமன்ற கூட்டத்தில், முறைப்படி அறிவித்து, சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்; அதுவரை போராட்டம் தொடரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X