ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டு ஆதாரமில்லை என்கிறது ஐகோர்ட்..

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
மும்பை-போதை பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை எனக் கூறி ஜாமின் அளித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வைத்திருந்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். உத்தரவுஆர்யனின் ஜாமின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற

மும்பை-போதை பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை எனக் கூறி ஜாமின் அளித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.



latest tamil news


நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வைத்திருந்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். உத்தரவுஆர்யனின் ஜாமின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி என்.டபிள்யு சாம்ப்ரே, அக்., 28ல் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு விபரம் நேற்று வெளியானது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:ஆர்யன் கான் மொபைல் போனில் உள்ள 'வாட்ஸ் ஆப்' பதிவுகளில், அவர் நண்பர்களுடன் சேர்ந்து போதை பொருள் பயன்படுத்த திட்டமிட்டிருந்ததை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவர் சட்ட விரோத குற்றம் புரிந்ததற்கான சான்றுகளும் போதுமானதாக இல்லை. ஆர்யன் மற்றும் அவரது நண்பர்கள் இருவருக்கும் குற்றம் செய்யும் நோக்கம் இல்லை என்பதால், அதற்கான வலுவான ஆதாரங்களையும் அரசு தரப்பில் அளிக்க முடியவில்லை. மேலும், ஆர்யன் கானிடம் போதைப் பொருள் இல்லை; அவரது நண்பர்களிடம் அதுவும் மிகச் சிறிய அளவிற்கே இருந்துள்ளது.


latest tamil news


ஜாமின்

இது போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் ஒன்று கூடி சட்ட விரோத செயல்புரிய திட்டமிட்டனரா என்பதையும், அதன் பின் போதுமான ஆதாரங்கள் உள்ளதா எனவும் நீதிமன்றம் முதலில் ஆய்வு செய்யும். இந்த அடிப்படை அம்சங்கள் இந்த வழக்கில் பலவீனமாக உள்ளதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-202123:01:18 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K சவுதி அரேபியவாக இருந்திருந்தால் இந்நேரம் மரண தண்டனை கிடைத்திருக்கும். சுதந்திரம், பேச்சுரிமை என்கிற பெயரில் பணம் படைத்தவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு நாட்டுக்கு துரோகம் செய்து வருவதும்,அதற்கு பெரும்புள்ளிகள் ஆதரவு தந்து தவறு என்று தெரிந்தும் அவர்களை காப்பாற்ற முனைவதும் தான் நமது ஜனநாயகத்தின் கொடுமையான விஷயம். இதற்கு நீதிமன்றங்களும் துணை போகின்றன. இதையே ஒரு சாமானியன் செய்திருந்தால் நீதிமன்றங்கள் சும்மா இருந்திருக்குமா ????
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
21-நவ-202118:57:20 IST Report Abuse
Anbuselvan தன்னிடம் இருக்கும் சிறிய அளவு போதை பொருளை தன் நண்பர்களிடம் ரோந்து கப்பல் வரும் முன் ஒப்படைக்க எவ்வுளவு நேரமாகும்? நாடு நல்ல இருக்கும்.
Rate this:
Cancel
SIVA - chennai,இந்தியா
21-நவ-202118:44:22 IST Report Abuse
SIVA அந்த சிறிது அளவு போதை பொருள் எத்தனை கிராம் அல்லது எத்தனை கிலோ என்று தெரிந்தால் வரும் காலத்தில் அதே அளவு போதை பொருள் மட்டும் கை இருப்பில் வைத்துக்கொண்டு முன் ஜாமீன் அப்ளை செய்வதற்கு வசதியாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X