பொது செய்தி

தமிழ்நாடு

இன்று பத்தாவது மெகா தடுப்பூசி முகாம்: 71 லட்சம் பேருக்கு அழைப்பு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் 10வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இதில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்துள்ள, 71 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜன., 16ம் தேதி முதல் இதுவரை 6.20

சென்னை-தமிழகத்தில் 10வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இதில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்துள்ள, 71 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.



latest tamil news


தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜன., 16ம் தேதி முதல் இதுவரை 6.20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினமும் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், செப்., மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதில், வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால், வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை என, இரண்டு மெகா தடுப்பூசி முகாமை பொது சுகாதாரத் துறை நடத்தி வருகிறது.

அதன்படி, 10வது மெகா தடுப்பூசி முகாம், தமிழகம் முழுதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற உள்ளது.இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனாவை தடுக்க, அனைத்து தரப்பினரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படாது.


latest tamil news


இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே நோய் எதிர்பாற்றல் ஏற்படும். எனவே, இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்துள்ள, 71 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல், முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது, தமிழக அரசிடம், ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X