சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஈரோடு பெரிய வலசு மாணிக்கம்பாளையம் ரோடு சுப்பிரமணிய நகர் சிவா மகள் பாக்ய லட்சுமி, 13. பெரிய வலசு உயர்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி. இவரது தாய் அம்பிகா, 40. பெரியவலசில் உள்ள தறி பட்டறை தொழிலாளி. இரண்டு ஆண்டுக்கு முன் உடல் நல குறைவால் சிவா இறந்து விட்டார். நேற்று காலை வழக்கம் போல் அம்பிகா வேலைக்கு சென்று விட்டார். விடுமுறை என்பதால் பாக்ய லட்சுமி வீட்டில் இருந்தார். மதியம்


ஈரோடு பெரிய வலசு மாணிக்கம்பாளையம் ரோடு சுப்பிரமணிய நகர் சிவா மகள் பாக்ய லட்சுமி, 13. பெரிய வலசு உயர்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி. இவரது தாய் அம்பிகா, 40. பெரியவலசில் உள்ள தறி பட்டறை தொழிலாளி.
இரண்டு ஆண்டுக்கு முன் உடல் நல குறைவால் சிவா இறந்து விட்டார். நேற்று காலை வழக்கம் போல் அம்பிகா வேலைக்கு சென்று விட்டார். விடுமுறை என்பதால் பாக்ய லட்சுமி வீட்டில் இருந்தார். மதியம் 2.30 மணிக்கு வீட்டு அம்பிகா வந்தபோது வீட்டின் கதவு உள் பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்த போது படுக்கை அறையில் சேலையில் பாக்யலட்சுமி துாக்கிட்டு கொண்டது தெரியவந்தது.அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அம்பிகா அழைத்து சென்றார். பாக்யலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மொபைல் போன் பேசுவதை கண்டித்ததாலோ அல்லது வேறு காரணத்தினாலோ தன் மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அம்பிகா புகாரில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X