சென்னை விமான நிலையத்தில் பரிதவிக்கும் சர்வதேச பயணியர்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை : 'சென்னை விமான நிலையத்தில், குளிர்சாதனம், வைபை வசதி சரியாக இல்லை; விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்குள் மிகுந்த சிரமமாக உள்ளது' என, சர்வதேச விமான பயணியர் புகார் கூறியுள்ளனர்.சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன், துபாய், குவைத், பஹ்ரைன் உட்பட பல நாடுகளுக்கு சர்வதேச விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.வெளிநாடுகளிலிருந்தும் சென்னைக்கு சர்வதேச
 சென்னை விமான நிலையத்தில் பரிதவிக்கும் சர்வதேச பயணியர்

சென்னை : 'சென்னை விமான நிலையத்தில், குளிர்சாதனம், வைபை வசதி சரியாக இல்லை; விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்குள் மிகுந்த சிரமமாக உள்ளது' என, சர்வதேச விமான பயணியர் புகார் கூறியுள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன், துபாய், குவைத், பஹ்ரைன் உட்பட பல நாடுகளுக்கு சர்வதேச விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.வெளிநாடுகளிலிருந்தும் சென்னைக்கு சர்வதேச விமானங்கள் வருகின்றன. குறிப்பிட்ட இடைவெளியில் சர்வதேச விமானங்கள் தரையிறங்கும் போது, ஒவ்வொரு விமானத்திலிருந்தும், 100க்கும் மேற்பட்ட பயணியர் தரையிறங்குகின்றனர்.பயணியரின் குடியுரிமை ஆவணங்களை சரிபார்த்து, அவர்களது உடைமைகளை எடுத்து வெளியில் செல்ல, அதிகபட்சம் இரண்டு மணி நேரம் பிடிக்கும்.

இந்த இரண்டு மணி நேரத்தில் அதிகபட்சமாக, 1,000 பயணியர் வரை கூட நேரிடுகிறது. இதனால், வெளியில் செல்வதற்குள் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, பயணியர் தரப்பில் கூறியதாவது:விமான நிலையத்தில் போதிய குளிர்சாதன வசதி வழங்கப்படவில்லை. 'வைபை' நெட்வொர்க்கும் முறையாக கிடைக்கவில்லை. தனிமனித இடைவெளியை பின்பற்ற விழிப்புணர்வு பதாகை வைத்துள்ளனர்.ஆனால், பின்பற்றுவதற்கான அறிகுறிகளும் இல்லை. சர்வதேச பயணியர் சிரமமின்றி வெளியேற, சென்னை விமான நிலைய நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X