பொது செய்தி

தமிழ்நாடு

'காவல் கரங்கள்' வாயிலாக ஆதரவற்ற 1,055 பேர் மீட்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை : 'காவல் கரங்கள்' உதவி மையம் வாயிலாக, ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றியவர்கள் உட்பட, 1,055 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றுவோரை மீட்க, சென்னை போலீசில், பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில், 'காவல் கரங்கள்' உதவி மையம் செயல்படுகிறது.இம்மையத்தின் வாயிலாக மார்ச் 15ல் இருந்து, போலீசார் இதுவரை 1,055 பேரை

சென்னை : 'காவல் கரங்கள்' உதவி மையம் வாயிலாக, ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றியவர்கள் உட்பட, 1,055 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றுவோரை மீட்க, சென்னை போலீசில், பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில், 'காவல் கரங்கள்' உதவி மையம் செயல்படுகிறது.

இம்மையத்தின் வாயிலாக மார்ச் 15ல் இருந்து, போலீசார் இதுவரை 1,055 பேரை மீட்டுள்ளனர்.இவர்களில் 79 பேரை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்; 901 பேர், அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 75 பேர், மன நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.கன மழை பெய்யும் இம்மாதத்தில் மட்டும், நவ., 1 - 15ம் தேதி வரை, 103 பேரை மீட்டுள்ளனர். இவர்களில், 63 பேர் தொண்டு நிறுவன இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன நலம் பாதிக்கப்பட்ட ஆறு பேர், சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இப்பணிகளுடன் இதுவரை ஆதரவற்ற நிலையில் இறந்த, 200 பேரின் பிரேதங்களை, போலீசார் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துள்ளனர். வெளி மாநிலங்களைச் சேர்ந்த, 127 பேர் மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த மாநிலங்களில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 15 பேர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இப்பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் கரங்கள் உதவி மைய போலீசாருக்கு, கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X