மாஜி துணை முதல்வர் பெயரில் ஆட்டை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' துணை முதல்வர் பெயரில் 'ஆட்டை'

Added : நவ 21, 2021
Share
சென்னை : முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் உறவினர் எனக் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக, 44 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் உட்பட எட்டு பேரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி, அங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மதனகோபால், 37. இவர், முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் உறவினர் எனக் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக, 44

சென்னை : முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் உறவினர் எனக் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக, 44 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் உட்பட எட்டு பேரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி, அங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மதனகோபால், 37. இவர், முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் உறவினர் எனக் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக, 44 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.செம்மஞ்சேரி, சுனாமி நகரைச் சேர்ந்தவர் ஜோசப், 32. இவர், அதே பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளார்.

அதேபோல, சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன், 40, உள்ளிட்ட ஐந்து பேர், சமீபத்தில் மயிலாப்பூர் காவல் நிலைய எல்லையில் கோபிநாத் என்பவரை கொலை செய்த வழக்கில் சிக்கினர்.காசிமேடு பகுதியைச் சேர்ந்த விமல்குமார், 22, மீது, கொலை மற்றும் ஆயுத தடை சட்டப்பிரிவில் வழக்கும் உள்ளது. இவர்கள், எட்டு பேரையும் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, போலீசார் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.இந்தாண்டில் நேற்றுடன், 351 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X