பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டால் தான் வணிக வளாகம், தியேட்டருக்குள் அனுமதி

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை-'வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர்செல்வ விநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். எனவே,

சென்னை-'வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news


இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர்செல்வ விநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். எனவே, மார்க்கெட், திரையரங்கம், வணிக வளாகம், பள்ளி, கல்லுாரிகள், விளையாட்டு மைதானம், ஓட்டல்கள், தொழிற்சாலை உள்ளிட்ட பொது இடங்களில், தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.


latest tamil news


இவற்றை, அந்தந்த உரிமையாளர்கள், பொது சுகாதாரத் துறை சட்டம் - 1939ன்படி உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே உரிமையாளர்கள் அனுமதிக்கிறார்களா என்பதை, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
21-நவ-202114:54:15 IST Report Abuse
Visu Iyer தடுப்பூசி கட்டாயம் இல்லை தானே.. அப்படின்னா.. இது எப்படி சரியாகும் என்று யாரும் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்களா
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-நவ-202114:26:35 IST Report Abuse
S.Baliah Seer . இல்லாத கொரானாவுக்கு ஏனய்யா தடுப்பூசி?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
21-நவ-202114:57:18 IST Report Abuse
Visu Iyerஅப்போ லாக் டவுன் கொண்டு வந்தது எல்லாம் சும்மா வா.. அப்போ மோடி ஜி அந்த திட்டங்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமா ? விவரமா சொல்லுங்கப்பா ... தேர்தல் வேற வருது.....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-நவ-202112:59:25 IST Report Abuse
Lion Drsekar சிலர் சிரிப்பார் சிலர் அழுவார், இதற்கு அந்த கடைக்காரர்கள் மற்றும் இடங்களில் இவர்களை சோதனை செய்ய ஆட்களை யார் நியமிப்பார்கள், அப்படியே நியமித்தாலும் வருபவர்கள் வரிசையில் நின்று தங்கள் அத்தாட்சியை காண்பிப்பார்களா வேகமாக தங்கள் பொருட்களை வாங்கிச்செல்வார்களா? திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பாகவே விமான நிலையத்துக்கு செல்வது போல் வரவேண்டுமா? நடப்பதாக இருந்தால் பாராட்டலாம், நடைமுறையில் பின்பற்ற முடியுமா? ஒருக்கால் இந்த சோதனைக்கு அறநிலையத்துறையின் வாயிலாக ஊழியர்களை நியமித்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
21-நவ-202114:55:00 IST Report Abuse
Visu Iyerஅட போங்க சார்.. சோதனை அதிகாரிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் அவரும் விட்டு விடுவார்.. எல்லாத்துக்கும் வழி இருக்குதுங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X