தமிழ்நாடு

காயங்களும், தழும்புகளும் என் ஆபரணம்; சொல்கிறார் 'சிங்க பெண்' இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

Added : நவ 21, 2021
Share
Advertisement
சமீபத்தில் கொட்டித் தீர்த்த கன மழையில் நனைந்தபடி, கல்லறை தோட்டத்தில் உயிர் ஊசலாடியபடி கிடந்தவரை இறந்தே விட்டார் என, பலர் வேடிக்கை பார்க்கையில், அவரை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில், சிறிதும் தாமதிக்காமல் அவரை அலேக்காக துாக்கி தன் தோளில் போட்டு விரைந்த வர்டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.ஒரு சேர சென்னை மற்றும் காவல் துறையின் பெருமையை ஒரே
 காயங்களும், தழும்புகளும்  என் ஆபரணம்;   சொல்கிறார் 'சிங்க பெண்'  இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி


சமீபத்தில் கொட்டித் தீர்த்த கன மழையில் நனைந்தபடி, கல்லறை தோட்டத்தில் உயிர் ஊசலாடியபடி கிடந்தவரை இறந்தே விட்டார் என, பலர் வேடிக்கை பார்க்கையில், அவரை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில், சிறிதும் தாமதிக்காமல் அவரை அலேக்காக துாக்கி தன் தோளில் போட்டு விரைந்த வர்டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.ஒரு சேர சென்னை மற்றும் காவல் துறையின் பெருமையை ஒரே நாளில் தோளில் துாக்கி சுமந்தவர். அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தபடி உள்ளன.

இளைஞர்கள் பலர், இசை வாத்தியங்களுடன் வந்து அவரை வாழ்த்தி, பாட்டுப் பாடி மலர்க்கொத்து கொடுத்து சென்றனர்.'நல்லது செய்தால் பாராட்ட ஆயிரம் பேர் இருக்கின்றனர் என்பதற்கான அடையாளம் இது. நான் இளைய தலைமுறைக்கு உந்து சக்தியாக மாறிஇருக்கிறேன் என்பது மகிழ்ச்சியை தருகிறது' என்கிறார் ராஜேஸ்வரி.

மேலும், அவர் நம்மிடம் கூறியதாவது:முதல்வர் வரை பாராட்டு கிடைக்கும் என்றெல்லாம் நினைத்து கூட பார்க்கவில்லை. மழையில் மயங்கிக் கிடந்த மனிதனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே, என் மனதில் ஓடியது. அதற்காக தான் யாராவது துாக்குவார்கள் என்று எதிர்பார்க்காமல், நானே தோளில் துாக்கி ஓடினேன்.நான் மட்டுமல்ல; மனிதநேயமுடைய காவல் துறையினர் யாராக இருந்தாலும் அன்று அதை தான் செய்திருப்பர். எனக்கு கிடைக்கும் இந்த பாராட்டை, நான் சார்ந்துள்ள காவல் துறைக்கே சமர்ப்பிக்கிறேன்.

முதல்வரின் வாழ்த்து செய்தியை படிக்கும் போது, 'இதுபோன்ற துணிகரமான செயல் ஒன்றும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு புதிதல்ல' என, அவரே கும்பகோணம் மகாமகம் உள்ளிட்ட சம்பவங்களை கோடிட்டு காட்டியிருந்தார். அது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.கும்பகோணம் சம்பவம், அது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. எதிர்பாராமல் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மக்கள் ஒருவரை ஒருவர் மிதித்தபடி ஓடினர்.மிதிபட்டவர்கள் உடனடி சிகிச்சை பெற்றால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற அவசரநிலை...!களத்தில் இறங்கி எவ்வளவு பேரை துாக்கி போய் காப்பாற்ற முடியுமோ,

அவ்வளவு பேரை துாக்கி சென்று அன்று காப்பாற்றினேன்இறந்து போன என் தந்தை எட்வர்ட், காவல் துறையில் உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் எனக்கு கற்றுக் கொடுத்தது எல்லாம் நேர்மை, உண்மை, உழைப்பு மட்டுமே. நீ சம்பாதிக்க வேண்டியது எல்லாம் மக்களின் நன்மதிப்பைத் தான் என, சொல்லி சொல்லியே வளர்த்தார். கூடவே, அசாத்திய துணிச்சலையும் கற்றுக்கொடுத்தார்.இதன் காரணமாக, எத்தனை ரவுடிகள் இருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பேன். கஞ்சா விற்ற ஒரு ரவுடி அரிவாளால் வெட்டினான். அந்த காயத்துடன் ரத்தம் கொட்டக்கொட்ட அவனை மடக்கிப் பிடித்தேன். இது போன்ற சம்பவங்கள் காரணமாக, என் கைகளில், உடம்பில் வெட்டுக்காயங்களும், அது தந்த தழும்புகளும் நிறையவே உள்ளன. இந்த தழும்புகள் தான் என் ஆபரணங்கள்!இவ்வாறு, ராஜேஸ்வரி கூறினார்.துப்பாக்கி சுடுதல், நெருப்பு வளையத்தில் மோட்டார் பைக்கில் பாய்ந்து சாகசம் செய்தது, பல்வேறு தடகள போட்டிகளில் கிடைத்தது என, அவரது வீடு முழுதும் பதக்கங்களும், அதற்கு சான்றான புகைப்படங்களும் காணப்படுகின்றன.

இது அவரது உற்சாக மனநிலையை காட்டுகிறது.போலீஸ்னா, 24 மணி நேரமும் 'பிட்'டாக இருக்க வேண்டும் என சொல்லும் ராஜேஸ்வரி, அதற்கேற்பநாள் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதை எல்லாம் தாண்டி, வெளியே தெரியாமல் பல ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு செலவிடுவதும், திருந்தி வாழ நினைப்போருக்கு உதவிக்கரம் நீட்டுவதும் அவரது மனிதநேயத்தின் தனிச்சிறப்பு.இதுவே அவருக்கு, 'ஏழை எளியவர்களின் காவலர்' என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளது. மனிதநேயமிக்க மக்கள் காவலரான இந்த சிங்க பெண்ணுக்கு, இந்த தருணத்தில் நாமும் 'சல்யூட்' அடித்து வாழ்த்துவோம்!

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X