தமிழ்நாடு

வெள்ளத்தை கடக்க படகு கிராம மக்கள் மகிழ்ச்சி

Added : நவ 21, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மணிமுக்தா ஆற்றை கடக்க மாவட்ட நிர்வாகம் பைபர் படகு ஏற்பாடு செய்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விருத்தாசலம் சொட்டவனம் கிராமத்தில் 2,000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் விளைநிலங்களில் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.விளைநிலங்கள் மணிமுக்தாறு,
 வெள்ளத்தை கடக்க படகு  கிராம மக்கள் மகிழ்ச்சி

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மணிமுக்தா ஆற்றை கடக்க மாவட்ட நிர்வாகம் பைபர் படகு ஏற்பாடு செய்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விருத்தாசலம் சொட்டவனம் கிராமத்தில் 2,000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் விளைநிலங்களில் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.விளைநிலங்கள் மணிமுக்தாறு, வெள்ளாற்றின் நடுவில் உள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கிராம மக்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையில், மணிமுக்தாறு, வெள்ளாறு ஆகிய இரண்டு ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். கிராம மக்கள் ஆற்றை கடக்க மாவட்ட நிர்வாகம், பைபர் படகு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பைபர் படகை அக்கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பைபர் படகை மாவட்ட நிர்வாகம் விட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X