தமிழ்நாடு

மகள் மாயமான விரக்தி தந்தை தற்கொலை

Added : நவ 21, 2021
Share
Advertisement
குன்றத்துார் : குன்றத்துாரில், மகள் காணாமல் போன விரக்தியில், தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்தது, சோகத்தை ஏற்படுத்தியது.குன்றத்துாரை அடுத்த கொல்லச்சேரி, காந்தி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 42; ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.சந்தேகமடைந்த குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது, பிரகாஷ் துாக்கிட்டு தற்கொலை

குன்றத்துார் : குன்றத்துாரில், மகள் காணாமல் போன விரக்தியில், தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்தது, சோகத்தை ஏற்படுத்தியது.குன்றத்துாரை அடுத்த கொல்லச்சேரி, காந்தி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 42; ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

சந்தேகமடைந்த குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது, பிரகாஷ் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், சில நாட்களுக்கு முன் பள்ளி செல்வதாக கூறி சென்ற பிரகாஷின் மகள் காணாமல் போனதாகவும், மகள் காணாமல் போனதால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ், தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து, குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X