பொது செய்தி

தமிழ்நாடு

பணியாளர்களுக்கு மழை கோட் அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாநகராட்சி பகுதியில் துாய்மை பணியில் ஈடுபட்டுவரும் 300 பேருக்கு மழைகோட்டுகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார்.கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கன மழையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் 300 பேருக்கு, தனது சொந்த செலவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மழை கோட் வழங்கினார். கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ் அவர் பேசுகையில், தொடர் மழை

கடலுார் : கடலுார் மாநகராட்சி பகுதியில் துாய்மை பணியில் ஈடுபட்டுவரும் 300 பேருக்கு மழைகோட்டுகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கன மழையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் 300 பேருக்கு, தனது சொந்த செலவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மழை கோட் வழங்கினார். கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ் அவர் பேசுகையில், தொடர் மழை பெய்து வரும் நிலையில் பாதுகாப்பாக மக்கள் பணியில் ஈடுபட முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், துாய்மை பணியாளர்களுக்கு மழைக் கோட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கான பணியில் தொய்வின்றி தொடர்ந்து பணிகளில் ஈடுபட வேண்டும், என்றார்.கமிஷனர் (பொறுப்பு) அரவிந்த் ஜோதி, பொறியாளர் செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், சித்ராலயா ரவிச்சந்திரன், மாவட்ட தி.மு.க., பிரதிநிதி கோவலன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X