தமிழ்நாடு

மணலி புதுநகரில் முதல்வர் ஆய்வு

Added : நவ 21, 2021
Share
Advertisement
மணலிபுதுநகர் : மணலிபுதுநகரில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.ஆந்திர மாநிலத்தில் பெய்யும் கனமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, நேற்று முன்தினம் காலை துவங்கி, நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.இதனால் உபரி நீர் திறப்பும் படிப்படியாக
 மணலி புதுநகரில் முதல்வர் ஆய்வு

மணலிபுதுநகர் : மணலிபுதுநகரில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.

ஆந்திர மாநிலத்தில் பெய்யும் கனமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, நேற்று முன்தினம் காலை துவங்கி, நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.இதனால் உபரி நீர் திறப்பும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடி வரை உபரி நீர், கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. ஆற்றில் அதிகளவில் நீர் திறப்பால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மணலி புதுநகர், சடையங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசித்த, 520க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மணலிபுதுநகரில், கொசஸ்தலை ஆற்று உபரி நீர் சூழ்ந்த, வடிவடையம்மன் நகர், மகாலட்சுமி நகர் போன்ற பகுதிகளை, நேற்று மதியம் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது, வெள்ளநீரில் இறங்கி மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

மேலும், தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரண முகாம்களில் செய்யப்பட்ட வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ.,க்கள், சுதர்சனம், சங்கர், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.சடையங்குப்பம் மக்கள் ஏமாற்றம்!கொசஸ்தலை உபரி நீரால், சடையங்குப்பம் - பர்மா நகர் கிராமங்களுக்கு செல்லும் மூன்று வழியிலும், ஒன்றரை அடி உயரத்திற்கு உபரி நீர் ஏறிஉள்ளது. இந்நிலையில், மணலிபுதுநகர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த முதல்வர், சடையங்குப்பம் -பர்மா நகருக்கு வருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கார் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் செல்வதால், முதல்வர் அங்கு செல்லவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X