பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கடலுார் : டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகியை பணி நீக்கம் செய்ததை கண்டித்து, கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில மாநாட்டில், டாஸ்மாக் நிர்வாகத்தின் முறைகேடுகள் குறித்து, டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன் பேசினார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அவரை டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது. இதனை
 டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலுார் : டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகியை பணி நீக்கம் செய்ததை கண்டித்து, கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில மாநாட்டில், டாஸ்மாக் நிர்வாகத்தின் முறைகேடுகள் குறித்து, டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன் பேசினார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அவரை டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து, மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலுார் முதுநுகரில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். மாநில தலைவர் சரவணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கல்யாணசுந்தரம், வேலாயுதம், ஏ.ஐ.டி.யூ.சி., கொடையழகன், பணியாளர் சங்க சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.மாவட்ட பொருளாளர் நாகராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X