பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தும் மூன்று ஏரிகள் நிரம்பாத அவலம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தும் 350 ஏக்கர் பரப்பில் உள்ள 3 ஏரிகளில் தண்ணீர் நிரம்பவில்லை.கடலுார் மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வந்தால் நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுார் ஏரிக்கு தண்ணீர் வரும்.அங்கிருந்து மேல்பட்டாம்பாக்கம் ஏரிக்கும், அது நிரம்பினால் பி.என்.பாளையம் ஏரிக்கும் தண்ணீர்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தும் 350 ஏக்கர் பரப்பில் உள்ள 3 ஏரிகளில் தண்ணீர் நிரம்பவில்லை.

கடலுார் மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வந்தால் நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுார் ஏரிக்கு தண்ணீர் வரும்.அங்கிருந்து மேல்பட்டாம்பாக்கம் ஏரிக்கும், அது நிரம்பினால் பி.என்.பாளையம் ஏரிக்கும் தண்ணீர் வரும். 350 ஏக்கருக்கு மேல் உள்ள இந்த 3 ஏரிகள் ஒரு முறை நிரம்பினால் பல ஆண்டுகளுக்கு சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிக்கும்.

ஆனால், ஏரிகளையும் ஏரிக்கு நீர் வரும் வாய்க்கால்களையும் பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். பலர் வீடுகள் கட்டியுள்ளனர்.இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். ஏரிகளில் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரவில்லை.இதனால் ஏரி முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

தற்போது ஏரிகளுக்கு நீர் வரத்து ஆதாரமான பெண்ணையாற்றில் சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால்ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.இதனால் மூன்று ஏரிகளிலும் சிறிது தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது. ஏரி மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார அதிகாரிகள் விரைவாகநடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X