பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

Added : நவ 21, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி அளித்தார்.கடலுாரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட அவர் அளித்த பேட்டி:கடலுார் மாவட்டத்தில் தமிழகத்தின் முக்கிய வடிகால் பகுதியாக உள்ளது. மேற்கு மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் ஐந்து ஆறுகள் மூலம் தண்ணீர் வடிகிறது.இதனால், ஆண்டு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி அளித்தார்.

கடலுாரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட அவர் அளித்த பேட்டி:கடலுார் மாவட்டத்தில் தமிழகத்தின் முக்கிய வடிகால் பகுதியாக உள்ளது. மேற்கு மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் ஐந்து ஆறுகள் மூலம் தண்ணீர் வடிகிறது.இதனால், ஆண்டு தோறும் மழைக் காலங்களில் கடலுார் கடுமையாக பாதிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் மூழ்கியும், வீடுகள் இடிந்தும், கால்நடைகள் இறந்தும் மக்கள் பாதிக்கின்றனர்.

தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்பாராத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கரைகள் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, 20க்கும் மேற்பட்ட கிராம நகர பகுதிகள் பாதித்துள்ளன. மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என, தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின் கூறினார்.அதற்காக குழு அமைத்து, ஆராய்ந்து நடவடிக்கை கண்டிப்பாக நிரந்தர தீர்வு காணப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பாதிப்புக்கு தீர்வு கண்டிருந்தால் இந்த பாதிப்புஏற்பட்டிருக்காது. நாங்கள் கண்டிப்பாக தீர்வு காண்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X