சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவன் பலி

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோடம்பாக்கம் : கோடம்பாக்கம் அருகே, பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.3கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராகேஷ், 19. இவர், தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் தன் நண்பரை காண, இருசக்கர வாகனத்தில் கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை வழியாக சென்றார்.அப்போது, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே, அய்யப்பன்தாங்கல் -

கோடம்பாக்கம் : கோடம்பாக்கம் அருகே, பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.3

கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராகேஷ், 19. இவர், தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் தன் நண்பரை காண, இருசக்கர வாகனத்தில் கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை வழியாக சென்றார்.அப்போது, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே, அய்யப்பன்தாங்கல் - பிராட்வே செல்லும் 'தடம் எண்: 26' மாநகர பஸ் மற்றும் அதன் அருகே சென்ற சைக்கிள் இடையே சென்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தவர் மீது, மாநகர பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்து வந்த பாண்டி பஜார் போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X