பொது செய்தி

தமிழ்நாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் கார்த்திகை தீபத்தையொட்டி, சொக்கப்பனை கொளுத்தி சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள வெற்றி விநாயகர், சந்திரமவுலீஸ்வரர், ஆண்டாள் நாச்சியார்,

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் கார்த்திகை தீபத்தையொட்டி, சொக்கப்பனை கொளுத்தி சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள வெற்றி விநாயகர், சந்திரமவுலீஸ்வரர், ஆண்டாள் நாச்சியார், மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

இரவு 7:00 மணியளவில் கோவிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பிரகாரத்தில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X