சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்

Added : நவ 21, 2021
Share
Advertisement
தொழிலாளி தற்கொலைபண்ருட்டி: பண்ருட்டி விழமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் பாபு,35; தச்சு தொழிலாளி; இவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்கிறார். கடந்த 17 ம் தேதி ஜெயராம் தியேட்டர் பின்புறத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்தார். கடந்த 19 ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை

தொழிலாளி தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி விழமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் பாபு,35; தச்சு தொழிலாளி; இவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்கிறார். கடந்த 17 ம் தேதி ஜெயராம் தியேட்டர் பின்புறத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்தார். கடந்த 19 ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.அடையாளம் தெரியாத முதியவர் சாவு விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், ஓ.பி., சீட்டு வாங்க 50 வயதுள்ள முதியவர் ஒருவர் நேற்று வரிசையில் நின்றார்.அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், இறந்திருந்தார்.

அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர், சின்னத்தம்பி மகன் கார்த்திகேயன், 55; இவர் நேற்று காலை விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது, அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

குள்ளஞ்சாவடி போலீசார் சடலத்தை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கேமரா சேதமாக்கியவர் கைது விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைபேட்டையைச் சேர்ந்தவர் சரவணன், 22; இவர் நேற்று குடிபோதையில் புதுக்கூரை பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை சேதப்படுத்தினார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X