தனியார் நிறுவனத்தில் திருட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவனத்தில் திருட்டு

Added : நவ 21, 2021
Share
கோயம்பேடு : கோயம்பேடு, நியூ காலனியில், குடிநீர் சுத்திகரிப்பு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோன் உள்ளது. அந்த குடோனின் மேல் பகுதியில் அதன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள், இரண்டு மடிக்கணினி, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உதிரிபாகங்களை திருடி சென்றனர். இது குறித்து அந்நிறுவன

கோயம்பேடு : கோயம்பேடு, நியூ காலனியில், குடிநீர் சுத்திகரிப்பு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோன் உள்ளது.

அந்த குடோனின் மேல் பகுதியில் அதன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள், இரண்டு மடிக்கணினி, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உதிரிபாகங்களை திருடி சென்றனர்.

இது குறித்து அந்நிறுவன மேலாளர் முசிர் அகமது, 46, என்பவர், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, கோயம்பேடைச் சேர்ந்த கலைமணி, 24, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.இவர் மீது, கோயம்பேடு காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X