சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவு ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கியோருக்கு வலை

Added : நவ 21, 2021
Share
Advertisement
மதுரவாயல் : மதுரவாயல் அருகே, இரவு ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கியோரை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரவாயல் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி புரிந்து வருபவர் விக்னேஷ், 35. இவர், நேற்று முன்தினம் இரவு, மதுரவாயல், சீமாத்தம்மன் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை மடக்கி விசாரித்த போது, அவர்கள் தப்பியோட முயன்றனர்.

மதுரவாயல் : மதுரவாயல் அருகே, இரவு ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரவாயல் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி புரிந்து வருபவர் விக்னேஷ், 35. இவர், நேற்று முன்தினம் இரவு, மதுரவாயல், சீமாத்தம்மன் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை மடக்கி விசாரித்த போது, அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களில் ஒருவனை விக்னேஷ் மடக்கி பிடித்தார்.

ஆத்திரமடைந்த மற்ற இருவரும், கற்களால் காவலர் மீது தாக்குதல் நடத்தினர்.இதில், காவலர் விக்னேஷ் மற்றும் பிடிபட்ட நபரும் காயமடைந்தனர். காயமடைந்த விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விசாரணையில், பிடிபட்ட நபர் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் பாசில், 19, என, தெரியவந்தது.

அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார், தப்பியோடிய பகவான் மற்றும் உஸ்மான் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X