சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாறு ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
சைதாப்பேட்டை : அடையாறு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன், மூன்று நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.சென்னை, சைதாப்பேட்டை, அரசு பண்ணையைச் சேர்ந்த பிரசாத் மகன் ஹரிஷ், 15. அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மகன் சந்தோஷ்குமார், 10. இருவரும், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் முறையே, 10 மற்றும் 5ம் வகுப்பு படித்தனர். கடந்த 16ம் தேதி, இருவரும் சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில்

சைதாப்பேட்டை : அடையாறு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன், மூன்று நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.சென்னை, சைதாப்பேட்டை, அரசு பண்ணையைச் சேர்ந்த பிரசாத் மகன் ஹரிஷ், 15. அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மகன் சந்தோஷ்குமார், 10. இருவரும், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் முறையே, 10 மற்றும் 5ம் வகுப்பு படித்தனர்.

கடந்த 16ம் தேதி, இருவரும் சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில் இறங்கி குளித்தனர். நீரோட்டம் அதிகமுள்ள நடு ஆற்றில் இறங்கியபோது, இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.சந்தோஷ்குமார் உடல் உடனே மீட்கப்பட்டது. ஹரிஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை கிண்டி, சைதாப்பேட்டை தீயணைப்பு மீட்பு படையினர் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், கோட்டூர்புரம், போர்ட் கிளப் அருகில், ஹரிஷ் உடல் கரை ஒதுங்கியது. சைதாப்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X