வியாபாரி மகன் கொலை வழக்கு; சிறுவன் உட்பட நான்கு பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரி மகன் கொலை வழக்கு; சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

Added : நவ 21, 2021
Share
திருமங்கலம் : வியாபாரியின் மகன் கொலை செய்யப்பட்ட வழங்கில், எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் வாசு 53; அதே பகுதியில் பழக்கடை வைத்துள்ளார். இவரது மகன் மகேஷ், 21; தந்தையின் பழக்கடையை கவனித்து வருகிறார்.மகேஷ், கடந்த 4ம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான ஹரிகிருஷ்ணன், 22,

திருமங்கலம் : வியாபாரியின் மகன் கொலை செய்யப்பட்ட வழங்கில், எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் வாசு 53; அதே பகுதியில் பழக்கடை வைத்துள்ளார். இவரது மகன் மகேஷ், 21; தந்தையின் பழக்கடையை கவனித்து வருகிறார்.மகேஷ், கடந்த 4ம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான ஹரிகிருஷ்ணன், 22, ஹரிஹரன், 21, ஆகியோருடன் மது அருந்தியுள்ளார்.பின், இருசக்கர வாகனங்களில் திருங்கலம் - கோயம்பேடு வழியாக மூவரும் சென்றுள்ளனர்.

அப்போது பெட்ரோல் தீர்ந்து வாகனம் வழியில் நின்றது.அதே நேரம் அங்கிருந்த மர்ம நபர்களுடன் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதில், மகேஷை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி தப்பினர். பலத்த காயமடைந்த மகேஷ், அரசு மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து விசாரித்த திருமங்கலம் போலீசார், மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு பேரை ஏற்கனவே கைது செய்தனர்.

இந்நிலையில், பழைய திருமங்கலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், நடுவாங்கரையைச் சேர்ந்த மகேஷ், 28, திருமூர்த்தி, 19, ராகேஷ் கண்ணன், 19, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில், இதுவரையில் நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X