இந்தியா

வழிப்பறி கொள்ளையரை உடனே கண்டுபிடிக்க முதல்வர் உத்தரவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை உடனே கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.புதுச்சேரியில் கடந்த 10 நாட்களில் ரெட்டியார்பாளையம், வில்லியனுார், நவசக்தி நகர் உட்பட ஐந்து இடங்களில், பெண்களிடம் தங்கசெயின், கைப்பை பறிப்பு சம்பவங்கள் நடந்தது.நேற்று முன்தினம் முதல்வர் ரங்கசாமி வழிபடும்,

புதுச்சேரி : செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை உடனே கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் கடந்த 10 நாட்களில் ரெட்டியார்பாளையம், வில்லியனுார், நவசக்தி நகர் உட்பட ஐந்து இடங்களில், பெண்களிடம் தங்கசெயின், கைப்பை பறிப்பு சம்பவங்கள் நடந்தது.நேற்று முன்தினம் முதல்வர் ரங்கசாமி வழிபடும், திலாஸ்பேட்டை அப்பா பைத்தியம் சுவாமி கோவில் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

இந்நிலையில், செயினை பறி கொடுத்தவர்கள் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர், போலீசாரை வரவழைத்து விபரங்களை கேட்டறிந்தார்.அப்போது, உடனடியாக செயின்பறிப்பில் ஈடு படும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X