சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.7,000 'ஆட்டை' மூன்று பேர் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
வேப்பேரி : ஆசிர்வதித்து தருவது போல நடித்து, மணி பர்சுடன் 7,000 ரூபாய் 'ஆட்டை' போட்ட இரண்டு திருநங்கையர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.3சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் காருண்யா, 35. இவர், தோழி அனிதாவுடன், கடந்த 16ம் தேதி, புரசைவாக்கத்தில் பொருட்கள் வாங்கியுள்ளார்.இருவரும் இரவு 8:00 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது, வேப்பேரி,

வேப்பேரி : ஆசிர்வதித்து தருவது போல நடித்து, மணி பர்சுடன் 7,000 ரூபாய் 'ஆட்டை' போட்ட இரண்டு திருநங்கையர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

3சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் காருண்யா, 35. இவர், தோழி அனிதாவுடன், கடந்த 16ம் தேதி, புரசைவாக்கத்தில் பொருட்கள் வாங்கியுள்ளார்.இருவரும் இரவு 8:00 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது, வேப்பேரி, ரித்தர்டன் சாலையில், இரு சக்கர வாகனத்தை நிறுத்தியபடி நின்ற போது, எதிரே இரு திருநங்கையர் மற்றும் ஒரு பெண் வந்துள்ளனர்.இவர்கள் காருண்யா மற்றும் இவரது தோழியிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க மணி பர்சை திறந்தபோது, ஆசிர்வதித்து தருவது போல நடித்து, 7,000 ரூபாயை 'ஆட்டை' போட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து, வேப்பேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், தோழியுடன் காருண்யா புகார் அளித்துள்ளார். விசாரணையில், பெரியமேடு பகுதியைச் சேர்ந்த திருநங்கையர் சுமித்ரா, 23; சிவன்யா, 19, மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவகாமி, 25, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மூவரையும் பிடித்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, மூவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 2,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X