அறுவை சிகிச்சைக்கு பின் 103 வயது மூதாட்டி நலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறுவை சிகிச்சைக்கு பின் 103 வயது மூதாட்டி நலம்

Added : நவ 21, 2021
Share
நங்கநல்லுார் : சென்னை, நங்கநல்லுார், வோல்டாஸ் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 72; ரயில்வே துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி.இவரது தாய் கோதாவரி, 1919ம் ஆண்டு ஆக., 17ம் தேதி பிறந்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் தன், 103வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் விமரிசையாக கொண்டாடினார்.இந்நிலையில், கடந்த மாதம் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், அவரது கை பந்துக் கிண்ண மூட்டு
 அறுவை சிகிச்சைக்கு பின் 103 வயது மூதாட்டி நலம்

நங்கநல்லுார் : சென்னை, நங்கநல்லுார், வோல்டாஸ் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 72; ரயில்வே துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி.

இவரது தாய் கோதாவரி, 1919ம் ஆண்டு ஆக., 17ம் தேதி பிறந்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் தன், 103வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் விமரிசையாக கொண்டாடினார்.இந்நிலையில், கடந்த மாதம் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், அவரது கை பந்துக் கிண்ண மூட்டு உடைந்து நொறுங்கியது. முகக் கண்ணாடி உடைந்து முகத்தில் குத்தியது.

இதையடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கோதாவரி அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு டாக்டர் கிருஷ்ணன் தலைமையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.பூரண நலமடைந்த ராஜலட்சுமி, நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சுற்று வட்டாரப் பகுதி மக்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து, வணங்கிச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X